புதன், 6 செப்டம்பர், 2017

பேராசிரியர் அன்பழகன்! வயது ஏற ஏற வல்லமை பெருக்கும் வித்தை தெரிந்த பொதுசெயலாளர்!

இது ஒரு அரசியல் செய்தி அல்ல ..  ஒரு பழுத்த அரசியல்வாதியின் உடல், உள ஆரோக்கியத்தை பற்றிய ஒரு சிந்தனை 
 94 வயது பேராசிரயர் அன்பழகன் முரசொலி பொதுக்கூட்ட மேடைக்கு இருமருங்கிலும் இருவர் கைப்பிடிக்க மெல்ல மெல்ல ஒரு யானை நடை நடந்து வந்து மேடை படிக்கட்டுக்களில் நிதானமாக ஏறி உட்கார்ந்தார். . வயதின் சுருக்கம் துளியும் கிடையாது . முதிர்ச்சியையும் மீறிக்கொண்டு கண்கள் உண்மையில் இரு சூரியன்கள் போல் ஒளிவீசியது . சென்றதேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இன்றும் தனது பொதுச்செயலாளர் பதவிக்குரிய பொறுப்புக்களை தானே மேற்கொள்கிறார். இந்த வயது வரை அவர் இவ்வளவு இளமையாக சிந்திக்கும் ஆற்றலை எப்படி பெறுகிறார்? எந்த கேள்விக்கும் ஞாபகமறதி இன்றி குன்றாத ராஜதந்திரத்தோடு பதில் கூறுகிறார். கட்சியிலும் நாட்டிலும் இருக்கும் எத்தனை எத்தனையோ சிக்கல்களிலும் தன்னம்பிக்கையோடு கவிழ்க்க நினைக்கும் எந்த சக்திக்கும் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் இயங்கி கொண்டிருக்கிறார்,
பேராசிரியரின் உடல் மொழியை அப்படியே உள்வாங்கி கமலஹாசன் நாயகன் படத்தில் வெளிக்காட்டி இருப்பார். அன்பழகனை பார்க்கும் பொழுதெல்லாம் கமலஹாசன் எவ்வளவு கூர்மையாக பேராசிரியரை கவனித்து இருக்கிறார் என்ற எண்ணம் வருகிறது. 
ஒரு வெற்றிகரமான கொள்கை பிடிப்புள்ளவரின் ஆளுமை என்பது அவரின் உடல் மொழியிலும் வெளிப்படும் என்பதை . வேலு நாயக்கரை மறக்க முடியாமல் செய்து கமலுக்கும் பெரு வெற்றியை தந்து .. நல்லார் ஒருவர் உளரே அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமாம் மழை என்ற வாக்கியத்திற்கு பொருள் சேர்க்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக