திங்கள், 4 செப்டம்பர், 2017

மீண்டும் ஒரு சுதந்திர போர் ... முரசறைந்த கமலஹாசன்

புரட்சி துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் எது சரி, யார் காரணம் என்பதையெல்லாம் பேச நிறைய பேர் இருக்கிறார்கள் நாம்... மக்கள், மாணவர்கள் நீட் விவகாரத்தில் ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். ஒரு புள்ள செத்துப் போச்சு... இனி ஒரு புள்ள செத்து கிடப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. கை கோர்ப்போம் நமது தமிழ் இனத்துக்குப் பல முறை துரோகங்கள் இழைக்கப்பட்டன. அப்போதெல்லாம் கையைப் பிசைந்துகொண்டிருந்தோம். இனி அப்படியில்லாமல் கை கோர்ப்போம்.
ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் முழுக்க முழுக்க வர்த்தக ரீதியான பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசை விமர்சித்து காத்திரமான கோபத்தை இதற்கு முன் யாரும் இப்படி வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுந்து வழங்கும் கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்களாக வெடித்துக் குமுறிவிட்டார்.
நீட் தேர்வின் காரணமாகத் தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கடந்த சனி அன்று (2.9.2017) நிகழ்ச்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். நேற்று (3.9.2017) நிகழ்ச்சியை முடிக்கும்போது, மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்காக தமிழகம் வெகுண்டெழ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் அந்த காத்திரமான பேச்சு இதோ:
நாட்டிலும் புரட்சி துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் எது சரி, யார் காரணம் என்பதையெல்லாம் பேச நிறைய பேர் இருக்கிறார்கள் நாம்... மக்கள், மாணவர்கள் நீட் விவகாரத்தில் ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். ஒரு புள்ள செத்துப் போச்சு... இனி ஒரு புள்ள செத்து கிடப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
கை கோர்ப்போம் நமது தமிழ் இனத்துக்குப் பல முறை துரோகங்கள் இழைக்கப்பட்டன. அப்போதெல்லாம் கையைப் பிசைந்துகொண்டிருந்தோம். இனி அப்படியில்லாமல் கை கோர்ப்போம். நீட் விவகாரத்திற்குத் தீர்வு என்னிடம் இல்லை. தீர்வை வைத்துக்கொண்டா சொல்ல மாட்டேன் என்கிறேன். கற்றவர்களுடன் கை கோர்த்ததால் நான் உயர்ந்திருக்கிறேன். அதைத்தான் செய்ய வேண்டும். பெரியவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என மாணவர்கள் ஒதுங்கக் கூடாது. நாளைய பெரியவர்கள் நீங்கள். உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும். அனைவரும் தீர்வை நோக்கிச் செல்வோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.
உலகைத் தாங்கி பிடிக்க நான் அட்லஸ் அல்ல. ஆனால் உலகம் என்னைத் தாங்கிப் பிடிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அப்படித் தாங்கிப் பிடித்ததாலேயே நான் கலைஞனாக நிமிர்ந்து நிற்கிறேன். நல்ல குடிமகனாக நாம் தலைநிமிர நாம் ஒன்றுபட வேண்டும். கட்சி, சாதி, மத பேதங்களைக் கடந்து ஒன்றுபட வேண்டும். அப்படியானால் இது என்ன சுதந்திரப் போராட்டமா?
ஆம் அதுதான்... காற்று வாங்க சுதந்திரம் கிடைத்ததே என்பதற்காகப் பெருமிதம் கொள்ளாமல் அதையும் கடந்து செல்ல வேண்டும். நமது கனவுகள் ஒன்றுதான். இவற்றைக் கலைப்பதற்கு சுயநலவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முடிந்த அளவு புத்தி சொல்வோம். இல்லையெனில் நகர்த்தி வைப்போம்.
இவ்வாறு கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசினார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹசன், நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் சில அறிவுரைகளை முன் வைத்தார். “அனிதாவைப் போல் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மாணவர்கள் இருக்கக்கூடும். அவர்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது. நாம் தோற்றுவிட்டோம். நம் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது என்று எண்ணிவிடக் கூடாது. இதுதான் முடிவு என்று எண்ணிவிடக் கூடாது. நாம் போராட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். அதற்கு மன ஊக்கம் அவசியம். நாம் வெற்றி பெறுவோம். அந்த நம்பிக்கையோடு அடுத்த முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும்” என்று உருக்கமாகப் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக