திங்கள், 4 செப்டம்பர், 2017

நீட் தேர்வினால் 425 முதல்தலைமுறை மாணவர்கள் மருத்துவ படிப்பை இழந்து விட்டனர் - டாக்டர் எழிலன்

tamil.oneindia.com/authors/mayura-akilan. சென்னை : நீட் தேர்வு அனிதாவின் மரணத்திற்கு காரணமாகிவிட்டது என்றும் நீட் தேர்வினால் 425 முதல்தலைமுறை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வு மதிப்பெண் முறைப்படி மருத்துவ படிப்பு கவுன்சில் நடைபெற்றதால் 1176 மதிப்பெண் எடுத்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது மாநிலம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது< சென்னை அண்ணா நகரில் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய டாக்டர் எழிலன் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சியில் இருந்திருந்தால் இரங்கல் கூட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டிருக்காது. திமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வில் விலக்கு கிடைத்து கிடைத்திருக்கும். சமூக நீதிக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடு.
திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று ஆதிக்க சக்திகள் நினைக்கின்றன என்றும் எழிலன் குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக