புதன், 13 செப்டம்பர், 2017

கொழும்பு இந்திய தூதரகம் முன்பாக அனிதாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்


சிறிலங்காவில் கடந்த சில மாதங்களாகவே "சைடம்" எனும் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மாணவர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.இது மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்கும் திட்டமாகும்.இப்போராட்டத்தை "அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்" முன்னெடுத்து வருகிறது. இதை போலவே தமிழ்நாட்டிலும் தமிழ்த்தேசிய இனத்தை சூறையாடும் திட்டத்தோடும், கல்வியை வணிகமயமாக்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட "நீட்" தேர்வுக்கு எதிராக சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பு தமிழ்-சிங்கள மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர். அமெரிக்கா,ஐரோப்பா,அரபு நாடுகள் என அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது.தற்போது அதை போலவே சிறிலங்காவில் அனிதா மரணத்திற்கு "நீதி" கேட்டும் கல்வி தனியார்மயமாதலுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் "அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்" ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக