செவ்வாய், 12 செப்டம்பர், 2017

சீமான் பிராண்ட் தமிழ் தேசியம் = கொச்சை வார்த்தை பேசுதல் மற்றும் ,பெண்களை அசிங்கமாக திட்ட தொண்டர்களுக்கு கற்று கொடுப்பது ?

Shalinmarialawrence : அண்ணன் சீமான் அவர்களின் பேட்டியை பார்த்தேன் .
அச்சமாக உள்ளது .தமிழ்நாட்டை இவர்தான் குத்தகைக்கு எடுத்திருப்பார் போல . இவரை தவிர யாரும் அரசியல் பேச கூடாதென்று மிரட்டுகிறார் .அரசியல் பேசுவதற்கு வயதை காரணம் காட்டுகிறார் .
இவர் பேச்சை கேட்கும்பொழுது ,ரஞ்சித்தை இவர் பார்க்கும் பார்வையே தவறாக இருக்கிறது .அதில் ஒரு ஜாதிய திமிர் தெரிகிறது .ஏதோ ரஞ்சித் ஒரு தீண்டத்தகாதவர் போலயே பேசுகிறார் .
இங்கே தமிழ்நாட்டில் யார் அரசியல் பேச வேண்டும் யார் பேச கூடாதென்று ,இனி இவர் தான் சொல்லி தருவார் போல தெரிகிறது . ஈழம் ஈழம் என்று பத்து தடவை சொல்லி விட்டால் இவர் ஈழத்தை காப்பாற்றியவராய் மாறிவிடுவார் என்று இவருக்கு யாராவது அட்வைஸ் செய்திருப்பார்கள் போல . ஈழத்தமிழர்களிடம் சென்று அண்ணனை பற்றி கேட்டால் வேறு மாதிரி சொல்லுகிறார்கள் .
அண்ணனுக்கு சினிமாக்காரர்கள் மேல் ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை .அவர் இதற்குமுன் என்ன மிலிட்டரியில் வேலை பார்த்தாரா ?

மொழியால் இணைவோம் ,மொழியால் இணைவோம் என்கிறார் ? அப்பொழுது தமிழகத்தில் வாழ்ந்து வரும் தெலுங்கு,கன்னடம் பேசும் அருந்ததியினர் எல்லாம் யார் ? அவர்களை அப்படியே ஒதுக்கி விடலாமா ?
இவ்வளவு நாள் தமிழ்நாட்டில் எல்லோரும் தமிழ் தானே பேசினார்கள் இல்லை என்றால் ,சிங்களத்திலா பேசி கொண்டிருந்தார்கள் ? அப்படி இருந்தும் அவர்களுக்குள் ஏன் இவ்வளவு பிரிவு வன்மம் ?
தமிழ் தேசியம் என்று வாய் சவடால் விடுகிறாரே, தமிழ் தேசிய கொள்கை என்ன ? கொள்கை சார்ந்து அவர்கள் இதுவரை தமிழகத்தில் கிழித்தது என்ன ?
வட மாநிலத்து playboy கிருஷ்ணனை மாயோன் என்று கொஞ்சுவது தமிழ் தேசியமா ?
தமிழ் மொழி காத்த பெரியாரை தன தொண்டர்களை விட்டு பொம்பளை பொறுக்கி என்று பேச வைத்து கொண்டிருப்பது தமிழ் தேசியமா ?
அவரின் தொண்டர்கள் இன்னும் ஜாதி பார்த்துதான் திருமண செய்கிறார்களே அது தமிழ் தேசியமா ?
தமிழ்மொழியை எங்கெங்கே கொண்டு போய் சேர்த்தார்கள் ?
இவர்களின் கட்சியில் எத்தனைபேருக்கு ஒழுங்காய் தமிழ் பேச வருகிறது ?
உவே சாமிநாத ஐயர் என்கிற ஜாதி வெறியனை கொண்டாடுவதுதான் தமிழ் தேசியமா ?
நாம் தமிழர் கட்சியில் பெண்களின் நிலை என்ன ?
கொச்சை வார்த்தை பேச ,பெண்கள் அசிங்கமாக திட்ட தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதுதான் தமிழ் தேசியமா ?
அண்ணன் சீமான் அவர்களே ,நீங்களும் தமிழ் பேசுகிறீர்கள் சங்காராச்சாரியாரும் தமிழ் பேசுகிறார் ,அவர் பக்கத்தில் சேர் போட்டு அமரும் தைரியம் இருக்கிறதா உங்களுக்கு ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக