an intelligence report claimed that about 1,000 semi-automatic pistols had been smuggled into Kerala...
Read more at: http://english.manoramaonline.com/news/kerala/2017/09/12/pistols-smuggled-into-kerala-police-probe.
வட நாட்டு பணியாளர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் கொலையாளிகள் மற்றும் போதை மருந்து சப்ளை செய்பவர்கள் கேரளா முழுவதும் குவிந்து கிடக்கின்றனர்
கொச்சி: மாநிலங்களுக்கு இடையே கள்ள துப்பாக்கி விற்பனை செய்து வரும் சட்டவிரோத கும்பல், நான்கு மாதங்களுக்கு முன், கேரளாவிற்குள், 1,000 கை துப்பாக்கிகளை கடத்தி கொண்டு வந்துள்ளது என்ற உளவுத்துறையின் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ம.பி.,யில் தயாரிக்கப்பட்டவை இது குறித்து மகாராஷ்டிர மாநில போலீசார், கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ராணுவத்தின் உளவுப்பிரிவு உதவியுடன், 1,000 கை துப்பாக்கிகளை தேடும் பணியில் கேரளா போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரை ஒரு துப்பாக்கியை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. கிரிமினல் குழுக்கள் மற்றும் சட்ட விரோத கும்பல்களிடம் அந்த துப்பாக்கிகள் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீபக்குமார் சகா என்பவர் தலைமையிலான குழுவை சேர்ந்த இரண்டு பேர், இரண்டு வார காலம், கொச்சியில் தங்கி இருந்தது கேரள போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கடந்த, ஜூலை மாதம், கள்ள துப்பாக்கிகள் வைத்து இருந்ததாக டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்து, கொச்சியில் முகாமிட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் சேன்வா என்ற இடத்தில் கள்ள துப்பாக்கி தொழிற்சாலை செயல்படுகிறது. ராணுவம் மற்றும் போலீஸ் பயிற்சி இடங்களிலும், சினிமா படபிடிப்பிலும் டம்மி துப்பாக்கி பயன்படுத்தப்படும். இந்த டம்மி துப்பாக்கியை, உண்மையான துப்பாக்கியாக மாற்றும் வேலை ம.பி., துப்பாக்கி தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படுகிறது. அந்த துப்பாக்கிகள் தான் கேரளாவிற்குள் கடத்தி வரப்பட்டுள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக