புதன், 6 செப்டம்பர், 2017

இந்திய அரசை எதிர்த்து நிற்கும் துணிச்சல் எப்படி வந்தது வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு?…

thetimestamil.:  நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை வேலூரில் உள்ள CMC மருத்துவக் கல்லூரி  தற்காலிமாக நிறுத்தியுள்ளது.
“ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வும், பண்பும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதே தங்களின் நோக்கம்.  மாணவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டே அவர்களுக்கு அட்மிஷன் வழங்கப்படும். நீட் தேர்வு மூலமாக அத்தகைய மாணவர்களை எங்களால் உருவாக்க இயலாது ” என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே CMC மருத்துவமனையில் ஒரு மருத்துவ இடம் ஐம்பது லட்ச ரூபாய்க்கு விற்கபடுவதாகவும் அங்கு மலையாளி கிறிஸ்துவர்கள் மட்டுமே அதிகம் படிக்க முடியும் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துள்ளன.
இது குறித்து வேலூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்களில் ஒருவருமான  Joshua Isaac Azad எழுதியுள்ள பதிவில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 2016 – 2017 நிதியாண்டு விவரத்தை குறிப்பிட்டுள்ளார்.
*2016 -2017க்கான செலவினங்கள்: 1062.02 கோடி
கட்டமைப்பு வளர்ச்சிக்கான செலவு: 61.45 கோடி
*மருத்துவ சேவைக்காக செலவிட்ட மானியத் தொகை: 171.22 கோடி,
கல்விக்காக செலவிட்ட மானியத் தொகை: 83.20 கோடி.
*வருவாயின் ஆதாரம்:
*நோயாளிகளிடமிருந்து பெற்ற கட்டணம்: 98.71%
*மாணவர்களிடமிருந்து பெற்ற கட்டணம்: 1.03%

*ஆதரவளிக்கும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி: 0.26%
*மருத்துவம் படிப்பதற்கு ஒரு மாணவருக்கான ஒரு வருடக் கல்விக் கட்டணம்: 3000 ரூபாய்
*நூறு வருடங்களைக் கடந்து மருத்துவமும் மருத்துவக் கல்வியும் பணம் சேர்ப்பதற்கான தொழிலாகக் கருதாமல் வரும் பணத்தை மீண்டும் மக்களுக்காகவே செலுத்தும் சேவையாகச் செயல்படுவதனால் மட்டுமே தனது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என இந்திய அரசையே எதிர்த்து நிற்கும் துணிச்சல் வருகிறது.
*1947இலிருந்து தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 85% இடங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது, 62 கிறிஸ்தவ பேராயங்கள், பிரிவுகளுக்கு அவை கொடுக்கபப்டுகிறது. இந்த நிறுவனங்கள் மாணவர்களை முன்மொழியலாம். அவர்களும் சிஎம்சியின் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தேர்ந்தேடுக்கப்படுகிறார்கள். இந்த மாணவர்கள் படிப்பு முடித்ததும் 2 ஆண்டுகள் கட்டாயம் ஏதாவது பின்தங்கிய பகுதியில் உள்ள அல்லது மிஷன் மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும்.
இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளின் அவதூறுகளை முறியடிப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக