வெள்ளி, 1 செப்டம்பர், 2017

அம்பத்தி ராயுடு ... முதியவரை காலரை பிடித்து இழுத்து அடித்தான் ... கிரிகெட் ரவுடி


veerakumaran. Oneindia Tamil  : ஹைதராபாத்: காரை மெதுவாக ஓட்டுமாறு கூறிய முதியவரை சட்டை காலரை பிடித்து இழுத்து அடித்ததாக கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு மீது புகார் எழுந்துள்ளது.
ஹைதராபாத்தில் வசிக்கும் அம்பத்தி ராயுடு இன்று காலை அங்குள்ளராஜிவ்காகாந்தி சர்வதேச மைதானத்திற்கு தனது எஸ்யூவி வகை காரில் சென்றார். அதிவேகமாக கார் ஓட்டிய அவர், சாலையோரம் காலையில் வாக்கிங் சென்ற முதியவர்களை உரசும் வகையில் சென்றுள்ளார்.
இதை பார்த்த ஒரு முதியவர், காரை மெதுவாக ஓட்டுமாறு சத்தமாக தெரிவித்துள்ளார். இதனால் ராயுவுக்கு கடுமையாக கோபம் வந்துவிட்டதாம். காரை நிறுத்திய அவர் கீழே இறங்கி அந்த முதியவரிடம் தகராறு செய்துள்ளார்.< இருவருமே வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, வாக்கிங் சென்ற பிற முதியவர்களும், அம்பத்தி ராயுடு செய்தது தவறு என்று கூறியுள்ளனர். இதனால் கோபம் தலைக்கு ஏறிய ராயுடு, அந்த முதியவரை சட்டை காலரை பிடித்து அடித்துள்ளார்.
இதை பார்த்த ஏரியாவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். சில இளைஞர்கள் ஓடி வந்து அம்பத்தி ராயுடுவை விலக்கி விட்டுள்ளனர். 2005ம் ஆண்டு டிசம்பரில், ராயுடு மீது இதேபோன்ற சர்ச்சை எழுந்தது. ஆந்திர கிரிக்கெட் சங்க செயலாளர் சிவலால் யாதவ் மகன் அர்ஜுன் யாதவை அடித்ததாக ராயுடு மீது புகார் எழுந்திருந்தது. இருவரும் உக்கிரமாக மோதியபோது அம்பயர்கள்தான் வந்து விலக்கி விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக