அரசுப் பள்ளியில் படித்த 24 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
மதுரை: மதுரை மாவட்டம் பொம்தும்பு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கியசாமி. இவர் பள்ளியில் படிக்கும் 90-க்கும் மேற்பட்ட மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. எனினும், 24 மாணவிகளின் பெற்றோரும் மாதர் சங்கமும் 2011-ம் ஆண்டு காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆரோக்கியசாமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மனித உரிமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் இன்று தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாக அறிவித்தார். ரூ.3.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 2 ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர். தினத்தந்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக