சனி, 16 செப்டம்பர், 2017

சாரணர் தேர்தலில் எச் .ராஜா படுதோல்வி ! வெற்றி பெற்ற மணிக்கு ! 234 வாக்குகளும் எச்.ராஜா 51 வாக்குகள்

palai.karthi : சாரண-சாரணியர் இயக்க தேர்தல் இன்று நடந்தது. இத்தேர்தலில்
தலைவர் பதவிக்கு பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார். அவருக்கு போட்டியாளாராக முன்னாள் பள்ளி கல்விதுறை இயக்குநர் மணி போட்டியிட்டார். தனக்கு வாக்குகள் கிடைக்காது என தெரிந்த எச்.ராஜா தேர்தலை நிறுத்த முயற்சி செய்தார். ஒரு இமெயிலைக் காட்டி மத்திய சராணர் இயக்கம் தேர்தலை நிறுத்தி விட்டது. அதனால் தேர்தலை நிறுத்துங்கள் என்று பிரச்சனை செய்தார். பின்னர் ட் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தச் சொன்னார். ஆனால் தேர்தல் அதிகாரி கலாவதி தேர்தல் நேர்மையாக நடைபெறுகிறது என்று சொல்லி எச்.ராஜா தரப்பினரின் அழுத்தங்களுக்கு பணியாமல் தேர்தலை நடத்தினார்.
ஒரு வழியாக முடிவு அறிவிக்கப்பட்டது. மொத்தம் 499 வாக்குகளைக் கொண்ட இந்த தேர்தலில் தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.இந்நிலையில் 499 வாக்குகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா பெற்ற வாக்குகள் வெறும் 51 வாக்குகள். பதிவான 285 வாக்குகளில் மணி 234 வாக்குகளும் எச்.ராஜா 51 வாக்குகளையும் பெற்றார்கள். 2 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக