புதன், 2 ஆகஸ்ட், 2017

நிதிஷ் பதவியை பறிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணை...

 நிதிஷ்,Nitish,வழக்கு,Case, விசாரணை,  Investigation,சுப்ரீம்கோர்ட்,Supreme Court,புதுடில்லி,New Delhi, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்,Bihar Chief Minister Nitish Kumar,  ஐக்கிய ஜனதா தளம், United Janata Dal, வழக்கறிஞர், Advocate,  எம்.எல்.சர்மா, ML Sharma, எம்.எல்.சி., MLC, காங்கிரஸ், Congress, சீதாராம் சிங்,Sitaram Singh, சி.பி.ஐ., CBI, நீதிபதிகள், Judges, தீபக் மிஸ்ரா,Deepak Mishra,அமிதவ ராய் , Amitava Rai, எம்.எம்.கன்வில்கர் , MM Gunwiller புதுடில்லி:பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை, எம்.எல்.சி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு,விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. கொலை வழக்கு: பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் நிதிஷ் குமார், எம்.எல்.சி., எனப்படும்,மாநில சட்ட மேல் சபை உறுப்பினராக உள்ளார். இந் நிலையில், நிதிஷ்குமார் மீதுகொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரி, எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.


அந்தமனுவில் சர்மா கூறியுள்ள தாவது:

காங்கிரசைச் சேர்ந்தசீதாராம் சிங், 1991ல், கொலை செய்யப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக நடந்த இந்த கொலையில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது.

நிதிஷ்குமார் போட்டியிட்ட பல தேர்தல்களில், வேட்பு மனு தாக்கலின் போது, தன் மீதான கிரி மினல் வழக்கு குறித்து தெரிவிக்காமல், அதை மறைத்துள்ளார்.தேர்தல் கமிஷன் விதிமுறைகளின் படி, தன் மீதான வழக்கு விபரத்தை மறைத்த, நிதிஷ் குமாரின், எம்.எல்.சி., பதவி பறிக்கப்பட வேண்டும். அவர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, அவரிடம் விரிவான விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உத்தர விட வேண்டும்; இதை, அவசர வழக்காக ஏற்று, உடனடியாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பட்டியலிடப்படும்

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தீபக் மிஸ்ரா,அமிதவ ராய் மற்றும் எம்.எம்.கன்வில்கர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ப தாக அறிவித்துள்ளது.'வழக்கு எண் பட்டிய லிடப்பட்டு, அதற்கான முறை வரும் போது, விசாரணை நடத்தப்படும்' என, நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக