ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

தமிழருவி மணியன் அரசியல் மாநாடு... காசு யார் கொடுத்தார்கள் ?

தமிழருவி மாநாட்டுக்கு ரஜினி வாழ்த்துச் செய்தி?
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இன்று (ஆகஸ்ட் 20) மாலை திருச்சியில் அரசியல் விழிப்பு உணர்வு மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு வருகிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிகள் வகுப்பதற்கான தமிழருவி மணியனின் அரசியல் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தமிழருவின் மணியனின் காந்திய மக்கள் இயக்கம் நடத்தும் இந்த அரசியல் விழிப்பு உணர்வு மாநாட்டில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருதல், உள்நாட்டு நதிகளை இணைக்க வேண்டும், பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், லோக் ஆயுக்தா உடனே அமைக்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இத்தனை கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாடு நடக்கிறது என்றாலும், இந்த மாநாட்டின் மைய விவாதமே ரஜினியின் அரசியல் பிரவேசம் - அவசியமா? என்பதுதான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என மீண்டும் தமிழக அரசியல்களத்தில் பேச்சு எழுந்தபோது, ‘நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்’ என்று தமிழருவி மணியன் வரவேற்று ரஜினிக்கு ஆதரவாகப் பேசினார். மேலும், ரஜினி தமிழருவி மணியனுடன் அரசியல் குறித்தும் விவாதித்தார். அரசியல் எல்லாம் அப்புறம் இருக்கட்டும் .... முதல்ல மாநாட்டு செலவுக்கு பணம் யார் கொடுத்தார்கள் மணியா ..

இந்த நிலையில், ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் - அவசியமா?’ என்று ரஜினியை மையமாக வைத்து தமிழருவி மணியன் இன்று திருச்சியில் நடத்தும் இந்த மாநாட்டுக்கு ரஜினி வாழ்த்துச் செய்தி அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி இந்த மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினால், நிச்சயமாக அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிடும். வாழ்த்துச் செய்தி அனுப்பாவிட்டால், அவர் இன்னும் அரசியலுக்கு வரலாமா? வரக்கூடாதா? என்று ஆழம் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றே கருத வேண்டும்.
இந்த மாநாடு மாலை 5 மணிக்குத்தான் தொடங்கப் போகிறது. அதற்குள் இந்த மாநாட்டுக்கு ரஜினியிடமிருந்து வாழ்த்துச் செய்தி வருகிறதா என்று பார்ப்போம். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக