கோவையில் நடைபெற்ற திருமணம் நிகழ்ச்சி ஒன்றியில் பேசிய நடிகர் கமல், அரசியல் குறித்து பேசினார். அவர்,
’’இது திருமண விழா அல்ல; இது ஆரம்ப விழா. ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது. அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நம் கடமை. இந்த சமூகத்தின் மீதான கோபம் எனக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தலைமையேற்க எனக்கு தைரியம் வந்துவிட்டதா என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு தைரியம் வந்துவிட்டதா?
நாம் நமது வேலையை செய்வோம். தேவைப்பட்டால் கோட்டையை நோக்கி புறப்படுவோம். தொடர்ந்து போராடுங்கள். தொடர்ந்து கேள்வி கேளுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுங்கள். சொத்து சேர்த்தால் மட்டும் போதாது; அதை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்’’ என்று கூறினார் நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக