கலைஞர் - வைரமுத்து சந்திப்பு
" கலைஞரைச் சமீபத்தில் சந்தித்தீர்களா? எப்படி இருக்கிறார்?"
"நேற்று (20/07/2017) முன்னிரவில் 7,30 மணி முதல் 8.45 வரையில் அவரைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன்.8.20 க்கு ராஜாத்தி அம்மாள் வந்தார்.அதுவரை நானும் கலைஞரும் மட்டுமே அமர்ந்திருந்தோம்.அவர் வாயிலிருந்து ஒலி மட்டும் தான் வரவில்லையே தவிர,மொழி வந்தது.பார்த்தவுடன் கையைப் பிடித்துக்கொண்டார்.நான் நின்று கொண்டேயிருந்தேன்.அவரது சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார்."உட்காருங்க,,," என்று சொன்னார்.உதடுகள் அசைகின்றன...ஆனால் ஒலி வராமல் காற்று வருகிறது. " உட்காருங்க..."ஒலியைக் காற்று வடிவமைத்தது.நான் புரிந்துக் கொண்டேன்.தெளிவாக இருக்கிறார் கலைஞர்.
நான்தான் அவரிடம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன்....அவர் கேட்டுக் கொண்டேயிருந்தார்.இடையில் பேசுவதற்கு முயற்சி செய்கிறார்.அந்த சொற்களை என்னால் அனுமானிக்க முடியவில்லை.அந்தச் சோகத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை.குழாய் வழியான சுவாசிப்பு இடையூறு செய்கிறது.குழாய் நீக்கப்பட்டால் நீங்கள் பழைய கலைஞரையே திரும்பப் பார்க்கலாம்.நினைவாற்றல் இருக்கிறது.ஒலி மட்டும் வந்துவிட்டால் ,அவர் பிரசாரத்துக்கேகூட வருவார் என்று நினைக்கிறேன்.அவரை வாராவாரம் சென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன் ( குழாய் அகற்றப்பட்டுவிட்டது தற்போது பேச்சு திரபி கொடுக்கபடுகிறது .. நிறைய வேலை இருக்கிறது சீக்கிரம் வெளியே வாங்க கலைஞரே )
அவரைப் பார்க்கவில்லை என்றால் நானும்,என்னைப் பார்க்கவில்லையென்றால் அவரும் ஏங்கிப் போகிற உணர்வை இருவரும் அடைகிறோம்.
அவர் விரைவில் நலம் பெறுவார்'.

இந்த மாத 'தடம்' இதழில் கவிஞர் வைரமுத்து அளித்த பேட்டியிலிருந்து.
நன்றி! ---Kalai Selvi<
நன்றி! ---Kalai Selvi<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக