தினகரனை கிண்டல் செய்கிறீர்களே! அவர் வைதீக பார்ப்பனர்களை நாடாமல், தமிழ் சித்த மரபை போற்றும்விதமாக மூக்குப்பொடி சித்தரிடம்தானே அடைக்கலம் சென்றார் என்பாரோ நாசா?
அதிமுக நலன் கருதி எதையும் துணிச்சலாக மேற்கொள்வே என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பல நூற்றாண்டுகள் அ.தி.மு.க சிறப்பாக செயல்படும். அ.தி.மு.க என்பது மாபெரும் இயக்கம். 100 ஆண்டுகள் ஆனாலும் தலைசிறந்த இயக்கமாக அ.தி.மு.க இருக்கும் என ஜெயலலிதா சென்னார். ஜெயலலிதா விருப்பபடி அ.தி.மு.க செயல்படும். கட்சியில் உள்ள பல்வேறு பொறுப்பாளர்கள் பல்வேறு தொண்டர்களுடன் இணைந்து, இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என சசி எனக்கு இட்ட உத்தரவு. இதில் மாறாமல் கட்சி சிறப்பாக வளர்வதற்கு என்னால் ஆன முயற்சி செய்வேன். எதிரிகளின் செயலால் சில காலம் கட்சியில் இல்லாமல் இருந்தேன். சுயநலம் மற்றும் பயத்தின் காரணமாக பழனிசாமி அணியினர் பேசுகின்றனர். சில நண்பர்கள் சுயநலம், பயம் காரணமாக சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் எனச் சொல்வார்கள். அ.தி.மு.க. நன்மைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். அ.தி.மு.க-வின் நலன் கருதி எதையும் துணிச்சலாக மேற்கொள்வேன்.
பொருளாளர் பதவி செல்லும் போது துணை பொது செயலர் பதவி ஏன் செல்லாது. துணை ஜனாதிபதி பதவியேற்பில் எங்களுக்கு அழைப்பு இல்லை. எங்களுக்கு பதில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., பங்கேற்றுள்ளனர். அதிமுக நலன் கருதி எதையும் துணிச்சலாக மேற்கொள்வேன். முதலமைச்சர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது.
எடப்படியும் தினகரனும் ஒருவர் மீது ஒருவர் சேறு வீச்சு :
தேர்தல் ஆணைய உத்தரவை மீறி நேற்று தீர்மானம் வெளியிட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்களின் பதவி பறிபோகும். ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிக்குமா என்பதை முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் கேட்க வேண்டும். 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அ.தி.மு.க-வே ஆட்சியமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நீட் தேர்வு விலக்கிற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் முயற்சி செய்து வருகிறார். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி செய்கிறது. துணைப் பொதுச் செயலாளருக்கான பொறுப்புகள் நிறைவேற்றப்படும்.
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது அதைச் சிந்தித்துக்கொள்வோம். காவல்துறை அனுமதி மறுத்தாலும் மேலூரில் பொதுக்கூட்டம் நடப்பது நிச்சயம்" என்று கூறினார். நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கைய்ய நாயுடு இன்று (ஆக.,11) பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். பதவியேற்பு விழா முடிந்ததும் பிரதமரை மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை பழனிசாமி, பிரதமரை நேரி்ல் சந்தித்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.
நீட் தேர்வு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து முழுமையாக படித்த பின்னர் கருத்து கூற முடியும். தினகரன் '420' என குறிப்பிட்டது அவருக்கு தான் பொருந்தும் என கருதுகின்றேன். கடந்த 3 மாத நிகழ்வுகள் பார்த்திருப்பீர்கள் அதனால் 420 அவருக்கு தான் பொருந்தும். அணிகள் இணைப்பு குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இணையும் என நம்புகிறோம். தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஸ்டாலின், எங்கள் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் வெற்றி பெற்றோம். சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கூடுதல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றோம். இனிமேல் கொண்டு வந்தாலும் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவோம் இவ்வாறு அவர் கூறினார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக