ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

ஸ்டாலின் தினகரன் கூட்டணி... சுப்பிரமணியம் சாமி தரகு வேலை ஆரம்பம்.

ஸ்டாலினும், தினகரனும் இணைந்து இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் கூட்டணி அரசு அமைப்பார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்துள்ள நிலையில், சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இன்று காலை ஆளுநரை சந்தித்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையிலான எதிர்க்கட்சியினர் உடனடியாக சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த சூழ்நிலையில் பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில்,' தமிழகம் பெருத்த பின்னடவை சந்திக்க உள்ளது. ஸ்டாலினும், தினகரனும் இணைந்து இன்னும் சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தினகரன், 'கூட்டணி அமைப்போம் என்று கூறியிருப்பது சுப்ரமணியன் சாமியின் தனிப்பட்ட கருத்து' என்று தெரிவித்துள்ளார் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக