ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

தமிழக விவசாயிகளுக்காக டெல்லியில் போராடுவோம்: குஜராத் காங். தலைவர் கீரமங்கலத்தில் பேட்டி

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் மற்றும் இந்திய விவசாயிகள் நலனுக்காக டெல்லியில் போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம் என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் கீரமங்கலத்தில் பேட்டி கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக குஜராத் காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவரும் அகில இந்திய முத்தரையர் சங்க தலைவருமான முன்னால் எம்.பி. குன்வாஜி பாய் பாவல்யா மற்றும் உஜ்ஜயினி முன்னால் காங்கிரஸ் எம்.பி சத்தியநாராயண பாவா ஆகியோர் கலந்து கொண்டனர். இது போன்ற விழாக்களில் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது என்றனர். இந்த விழா முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களிடம் இருவரும் பேசினார்கள். குஜராத் காங்கிரஸ் மாநில தலைவர் குன்வாஜி பாய் பாவல்யா கூறும் போது.. குஜராத்தில் பா.ஜ.க அரசு பொருப்புக்கு வந்த பிறகு மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. விளம்பரத்திற்காக பெபிதாக வளர்ந்த மாநிலம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகள் பிரச்சணை மட்டுமின்றி எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. கடந்த தேர்தல்களில் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் அடுத்த தேர்தலை கணக்கில் வைத்துக் கொண்டு அம்பானி அதானி போன்றவர்கள் மூலம் கோடி கோடியாக பணம் இறைக்கப்படுகிறது.


காங்கிரசை தோற்கடிக்க கோடி கொடியாக பணம் செலவு செய்யப்படுகிறது. மேலும் டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதை மோடி அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. அதனால் தம்ழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய விவசாயிகளின் நலனுக்காகவும் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி பிரமாண்டமாக போராட்டம் நடத்த உள்ளது. என்றார். தோடர்ந்து உஜ்ஜயினி முன்னால் எம்.பியும் அகிய இந்திய முத்தரையர் சங்கத்தின் முன்னால் தலைவருமான சத்தியநாராயண பாவா கூறும் போது.. பா.ஜ.க அரசு கொண்டு வந்த பணம் மதிப்பிழப்பு மற்றம் ஜி.எஸ்.டி போன்ற பிரச்சனையால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் தவிக்கிறார்கள்.

இந்தியாவில் பல கோடி இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு வேலைவாய்ப்பை பற்றி எந்த கவலையும் இல்லாமல் நாடு நாடாக சுற்றி வருகிறார் பிரதமர். வடக்கு மாநிலங்களில் உள்ள ஒரு சமுதாயத்திற்கு கிடைக்கும் சலுகைகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் போன்ற தென் மாநிலத்தில் சலுகைகள் மறுக்கப்படுகிறது. இந்த பிரிவினையை குடியரசுத் தலைவர் வரை கொண்டு சென்று இந்திய முலுவதும் ஒரே சலுகை முறையை கொண்டு வருவோம் என்றார்.

தமிழக அரசியல் பற்றிய கேள்விக்கு.. அது பற்றி ஏதும் பேச விரும்பவில்லை என்றனர். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள 84 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிவன் சிலை அமைந்துள்ள மெய்நின்றநாத சுவாமி ஆலயத்திற்கு சென்று பிரமாண்ட சிலையை பார்த்தவர்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். தொடர்ந்து பி.பி.எம். உயர்நிலைப்பள்ளிக்குச் சென்று பார்வையிட்டு சென்றனர். nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக