வியாழன், 17 ஆகஸ்ட், 2017

வாஞ்சிநாதன் ! முத்துராமலிங்க தேவர் ! மறைக்கப்பட்ட வரலாறுகள் முகநூல் / தமிழ் இந்து பொழுது போக்குகள் ..

தமிழறிஞர் பொ. வேல்சாமி தனது முகநூலில் எழுதிய பதிவு: ஜவஹர்லால் நேருவிற்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினேன்…. நண்பர்களே…. ஜவஹர்லால் நேரு ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி கேள்வியுற்று அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவல் கொண்டார். அப்பொழுது நண்பர்கள் என்னைச் சிபாரிசு செய்தார்கள். நேருவுக்கு நான் தான் தமிழ்மொழியின் வரலாற்றுப் பெருமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தேன். தமிழகத்தில் என்னிடம் தமிழின் வரலாற்றுச் சிறப்பைப் பற்றிய செய்திகளை கேட்டுக் கொண்டார் நேரு. பின்னர் வங்க இலக்கிய வரலாறு என்ற நூலுக்கு ஒரு முன்னுரை எழுதுகின்றார். அந்த முன்னுரையில் இதைப் பற்றி குறிப்பிடுகின்றார். அதன் பின்பு நேரு அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது, அவரை நான் நேரு மாமா என்றுதான் கூப்பிடுவேன். காரணம் எனக்கு வயது ஐந்து.
குறிப்பு
உண்மையில் நேரு அவர்களுக்கு தமிழ்மொழியின் வரலாற்றுச் சிறப்பைப் பற்றி கூறியவர் பள்ளியக்ரஹாரம் அறிஞர் கந்தசாமி பிள்ளை அவர்கள் என்பதை பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரம் ஐயா அவர்கள் என்னிடம் கூறினார்.
முரளிதரன் காசி விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றி.
எழுத்தாளர் வாசுதேவன் தனது முகநூலில் எழுதிய பதிவு:
வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள்..
முத்துராமலிங்க தேவர் அவர்கள் பால்ய பருவத்தில் தவக்கோலத்தில் இருந்தபோது, அவருடைய அன்னை தேவரின் தேஜஸ் முகத்தை பார்த்து தன் குலதெய்வ கோவில் பூசாரி ஒச்ச தேவரிடம் அழைத்துப்போனார்…பூசாரி அம்மையாரை உச்சிமுகர்ந்து, இது சாதாரண குழந்தை இல்லை… தாய்க்கு பெருமை சேர்க்கும் குழந்தை என்றவர், அந்த குழந்தையின் காதில் ரகசியமாக ஒரு கட்டளையிட்டார்….

கட்டளையை கேட்ட குழந்தை, துள்ளிகுதித்து ரேக்ளா வண்டியில் புயல் வேகத்தில் விரட்டி அடுத்து 48 மணிநேரத்தில் மஹாராஷ்டிரா ரத்தினகிரி சிறைச்சாலைக்குள் நுழைந்தது….அங்கு சிறையில் இருந்து சாவர்க்கர் எழுதிய Essentials of Hinduvata என்ற நூலை அவரிடமிருந்து பெற்று அதே வாயு வேகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் ரேக்ளா வண்டியில் பசும்பொன்னில் இறங்கினார்…..இந்த நூலை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் தேவர் அவர்கள்…
இந்த சம்பவம் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை…பின்னாளில் ஃபார்வார்ட் ப்ளாக் கட்சியை தொடங்கி, அக்கட்சியின் முக்கிய கொள்கையான தேசியமும், ஆன்மீகமும் என்ற முழக்கத்தை முன்வைத்தார்….முதுகளத்தூரில் இம்மானுவேல் சேகருக்கும் தேவர் அவர்களுக்கும் கைகலப்பு வந்தபோது அதற்காக மத்தியஸ்தம் செய்ய பர்மாவிலிருந்து நேதாஜி வந்தார்…குறிப்பிட்ட பஞ்சாய்த்து நடக்கும் நாளில் நேதாஜி அவர்களுக்கு கடும் காய்ச்சல், தொண்டை வலி….சைகையால் பஞ்சாயத்தை நடத்தினார்….இருப்பினும் நிலைமை கை மீறி போனதை செய்வதறியாமல் பார்த்த நேதாஜி, மன உளைச்சலுடன் பர்மாவுக்கு திரும்பினார்….
இதெல்லாம், தேவர் அவர்களின் தாய் மாமனின் மூத்த புதல்வன் இப்போது துபாயில் வசிக்கிறார்…நம்பர்-6, விவகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய் என்ற முகவரியில் வசிப்பவரும் தன்னை இஸ்லாமியராக மதம் மாறிக்கொண்ட முகம்மது அபு அல் ஹசான் என்பவரின் உண்மையான பெயர் மாயாண்டி தேவர். . இப்போது நம்மிடையே வாழும் மேதை! இது வரையில் அவரை சந்தித்தது சாண்டோ சின்னப்பா தேவர் ஒருவர் மட்டுமே….இவரை சந்தித்த தாக்கத்தினாலும், உண்மையை அறிந்ததால் தன் திரைப்படங்களுக்கு “ தாயை காத்த தனயன்”, ”தர்மம் தலை காக்கும்” “தாய் மீது சத்தியம்” என திரைப்ப்ட பெயரிலேயே முத்துராமலிங்க தேவரின் புகழ் பாடும் விதமாக பெயர் சூட்டினார்…..
இந்த வெளிவராத உணமைகளை மரியாதைக்குரிய முகம்மது அபு அல் ஹசான் என்ற மாயாண்டி தேவரின் அரேபிய மொழியில் எழுதிய சுயசரிதை, தமிழ் மொழியாக்கம் அக்மார்க் தரத்துடன் பிழையின்றி காலச்சுவடு பதிப்பகம் வெளியிடயிருக்கிறது….
இதுவரையில் நாம் நம்பிய வரலாறு அனைத்தையும் புரட்டிப்போடுவது உறுதி!
(புகைப்படத்தில்- முகம்மது அபு அல் ஹசான் தொழுகையின் போது எடுத்தது)
எழுத்தாளர் திரு. யோ எழுதியது:
வாஞ்சிநாதனை இப்போது தான் பிரஸ்ஸல்ஸ் வானூர்தி நிலையத்தில் சந்தித்தேன். தமிழ் இந்துவிடம் “நான் அவனில்லை” என்று சொல்ல சொன்னார்.  thetimestamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக