வியாழன், 17 ஆகஸ்ட், 2017

கர்நாடகாவில் இந்திரா கேன்டீன்... காலை உணவு 5... மதிய உணவு 10 ரூபாய்

பெங்களூரு: தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகம் போல், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரில், இந்திரா உண வகத்தை, அந்த கட்சியின் துணைத் தலைவர் ராகுல், நேற்று திறந்து வைத்தார்.
 கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு,மாதந் தோறும், 'அன்ன பாக்யா' திட்டத்தின் கீழ்,7 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. சுதந்திர தின விழாவில் பேசிய, முதல்வர் சித்த ராமையா, 'ஏழை மக்களின் பசியைப் போக்க, 100 கோடி ரூபாய் செலவில், மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும்' என்றார். இதையடுத்து, பெங்களூரில் நேற்று, முன்னாள் பிரதமரும், காங்.,மூத்த தலைவருமான, .மறைந்த, இந்திரா பெயரில், 'இந்திரா உணவகம்' துவங்கப் பட்டது. இந்த உணவகத்தை, காங்., கட்சி யின் துணைத் தலைவர் ராகுல் துவக்கி வைத்து, அங்கு வழங்கபட்ட உணவை சுவைத்தார்இந்த உணவகத் தில், காலை உணவு, ஐந்து ரூபாய்க் கும், மதியம் மற்றும் இரவு உணவு, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


உணவகத்தின் வெளியில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுடன், சிறுவயது ராகுல் இருப்பது போன்ற படத்துடன் கூடிய போஸ்டர்கள் வைக்கப் பட்டிருந்தன.இந்த விழாவில், ராகுல் பேசியதாவது:

பெங்களூரில் ஏழை மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது. கட்டடத் தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், ஏழைகளுக்காக இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இது போன்ற உணவகங்கள் திறக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உணவகத்தில் சாப்பிட, பா.ஜ., தலைவர்களும் கண்டிப்பாக வரிசையில் நிற்பர்.இவ்வாறு அவர் பேசினார்.

'அம்மா'வும், ராகுலும்!

உணவகத்தை திறந்து வைத்து, ராகுல் பேசியபோது, இந்திரா உணவகம் என குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக, அம்மா உணவகம் என்றார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து, விழாவுக்கு வந்திருந்த காங்கிர சார் கூறுகையில், 'நாட்டிலேயே முதல் முறை யாக, தமிழகத்தில் தான், அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகம் துவங்கப்பட்டது. 'இது, ராகுலின் மனதில் நன்கு பதிந்து விட்டது; இதனால் தான், இந்திரா உணவகத்தை, அம்மா உணவகம் என குறிப்பிட் டார் போலிருக்கிறது' என்றனர்.

தனியார் நிறுவனங்கள்

உணவகம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரு மாநகராட்சியின், 198 வார்டு களி லும், மலிவு விலை உணவகம் திறக்க, மாநில அரசு, 100 கோடி ரூபாய் ஒதுக்கியது. முதல் கட்டமாக, 101 உணவகங்கள் திறக்கப்பட்டுள் ளன; மீதமுள்ள, 97 உணவகங்கள், அடுத்த சில மாதங்களில் துவங்கப்படும்.
இந்த உணவகங்களுக்காக, 27 உணவு தயாரிப்பு கூடங்கள் அமைக்கப்படுகின்றன. உணவு தயாரித்து வழங்கல் மற்றும் இதர சேவைகள், இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக