புதன், 9 ஆகஸ்ட், 2017

தம்பிதுரையின் தமிழ் பேச்சுக்கு இந்தி எம்பிக்கள் கூச்சல் .. நாடாளுமன்றத்தில்

புதுதில்லி: நாடாளுமன்ற நிகழ்வு ஒன்றில் துணை சபாநாயகரும் அதிமுக உறுப்பினருமான தம்பிதுரை தமிழில் பேசியதற்கு, மற்ற எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா இருந்த பொழுது, அவர்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் 1942-ஆம் ஆண்டு நடந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் மிகவும் முக்கியமானது. அந்த போராட்டத்தின் 75-ஆவது ஆண்டு விழா நாடாளுமன்றத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை உரையாற்றத் துவங்கினார். அவர் தனது உரையினைத் தமிழில் துவங்கியதால், அதற்கு மற்ற எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவர் தனது உரையினை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக