வியாழன், 17 ஆகஸ்ட், 2017

நீட்-தொடரும் பொய் பிரச்சாரங்கள்

நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு எனும் பிச்சை போடப்பட்டதாக வந்த செய்திகள் கேட்டே பல நீட் வெறியர்கள் பொங்குவது விந்தையாக இருக்கிறது.மாணவமாணவிகளுக்கு அழைக்கப்படும் அநீதி என்று கூசாமல் எப்படி பொய் சொல்ல முடிகிறது என்று விளங்கவில்லை.2016 ஆம் ஆண்டு வரை தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் ,தமிழக அரசு பணத்தில் நடக்கும் கல்லூரிகளில் ,தமிழக அரசு கோட்டாவான 85 சதவீத இடங்களில் ,தமிழக சட்டமன்றம் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் தான் மாணவமாணவிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.திடீர் என்று சாதிவெறியர்கள் ,சாதிவெறி எச்ச நீதிமன்றத்தின் துணையோடு அணைத்து இடங்களும் நீட் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது தான் அநீதி,மாநில உரிமைகளுக்கு முற்றிலும் எதிரான மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான ஒன்றே தவிர தமிழக அரசு எடுக்கும் முடிவு சட்டத்துக்கு எதிரான ஒன்று அல்ல.
அகில் இந்திய தேர்வுகள் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வருகின்றன.திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி இருந்த போது மத்திய அரசுக்கு 15 சதவீத இடங்கள் தாரை வார்த்து கொடுக்கப்பட்டு விட்டது.அதனை போராடி மீட்காததால் தான் இன்று மொத்தத்தையும் இழக்கும் சூழல்,மற்றும் வன்மத்தோடு தமிழகத்தின் எதிரிகள் ஆனந்த கூத்தாடுவதை வேடிக்கை பார்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

இதனை முழுமையாக உள்வாங்கி மத்திய அரசு எனும் மோசடி சாதிவெறி அரசு எப்படி மத்திய அரசு இடங்களில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு இருந்தாலும் 10000 மருத்துவ கல்லூரி இடங்களில் 1000 இடங்கள் கூட SC /ST /OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்யயாமல் சாதிவெறியோடு ஏமாற்றி வருகிறது என்பதை மக்கள் முன் சுட்டி காட்டி நாடு தழுவிய போராட்டத்தை முன் எடுக்க வேண்டும்.மாநில அரசு,மாநில சட்டமன்றம் அனைத்தையும் கிள்ளுக்கீரையாக நடத்தும் மத்திய அரசு மற்றும் எச்ச நீதிமன்றத்தை எதிர்த்து போராட தவறினால் நாம் கோராக்பூர் ஆக மாறுவதை தடுக்க முடியாது..
By Poovannan Ganapathy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக