ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

இளைஞர்களில் பாதி பேருக்கு மேல் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாது

damodran : மெரினா புரட்சி மாணவர்கள் எழுச்சின்னு சொன்னா எனக்கு
சிரிப்பு தான் வருது.
இளைஞர்கூட்டம் பொங்கல் விடுமுறையில் வழக்கமா கடற்கரையில் கூடும் . இந்தமுறை ஜல்லிக்கட்டு பொறி பட்டது. அதை இளைஞர்கள் ஒரு திருவிழாவாக நாடாத்தினார்களே அல்லாமல் ஒரு போராட்டமாக நடத்தவில்லை மேலும் விழாக்காலம் என்பதால் போலீசும் கொஞ்சம் மெத்தனமாக இருந்தது . அதுக்குள்ளே பெரும் கூட்டம் கூடிவிட்டது . அதற்குள் அதற்கு வேறொரு சாயமும் பூசப்பட்டுவிட்டது உள்ளபடியே ...மாணவர்கள் திட்டமிட்டு கொள்கைக்காக நடத்திய போராட்டம் அல்ல.
அந்த மாபெரும் கூட்டத்தில் சிலர் கொள்கைக்காக உண்மையாக போராடியவர்களும் இருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது.
சரி....சொல்லவருவது என்ன என்றால் ?

மாணவர்கள் நாட்டுநலனில் அக்கறையுள்ள துடிப்புமிக்க உணர்ச்சிமிக்க போராட்டக்குணம் கொண்டவர்களா இருப்பின்...
நீட் தேர்வுக்காக இன்னொரு புரட்சி நடந்திருக்க வேண்டுமே ?
மீத்தேன் ஹைட்ரொகார்பனுக்காக புரட்சி வெடித்திருக்க வேண்டுமே ?....வெடிக்கவில்லையே ஏன் ?
தமிழ் நாட்டில் நடக்கும் எந்த அநியாயத்துக்காக இளைஞர்கள் போராடி இருக்கிறார்கள் ? இல்லையே..
நம்ம 90 % இளைஞர்களின் புரட்சி சினிமா நடிகர் நடிகைளின் பின்னாலும் செல்போன் டாஸ்மாக் பின்னால்தான் சுற்றிவருகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை
இளைஞர்களில் பாதி பேருக்கு மேல் தன்னை சுற்றி சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. உண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக