வியாழன், 31 ஆகஸ்ட், 2017

ஹாலிவூட் .,,,, .தேவையற்ற ஆணிகளை பிடுங்கிக்கொண்டிருக்கிறது .தமிழ் சினிமா .

Shalin Maria Lawrence: ஹாலிவுட் தரமும் பை நிறைய ஆணிகளும்.
ஹாலிவுட் என்று செல்லமாக அழைக்கப்படும் அமெரிக்க திரைப்பட துறையில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 700 திரைபடங்கள் வெளியிடப்படுகின்றன .
அதில் Action திரைப்படங்கள் அதாவது சண்டைக்காட்சிகள் நிறைந்தபடம் சராசரியாக 70
அனிமேஷன் திரைப்படங்கள் சராசரியாக 300
இதைத்தாண்டி மீதம் இருக்கும் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்கள் எல்லாமே DRAMA ,காதல் ,காமெடி ,சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் ,science -fiction ,பேய் படங்கள் ,வரலாறு மற்றும் பெண்ணிய படங்கள் தான் இருக்கும் .
அதிலும் ஒரு 10 படமாவது கறுப்பின விடுதலை இயக்கத்தை (american civil rights movement ) பற்றி இருக்கும் . அதுவும் அதில் 5 படமாவது ஒரு வெள்ளையரே இயக்கி இருப்பார் .
Action படங்கள் என்று எடுத்து கொண்டாலும் அதிலும் சூப்பர் ஹீரோ ,அரசாங்க உளவாளிகள் ,போர் பற்றிய படங்கள் என்று இருக்கும் .எல்லாமே துப்பாக்கியை தூக்கிகொண்டு தீவிரவாதிகளை தேடும் படமாக இருக்காது .
Drama படங்கள் பெரும்பாலும் ஒரே ஊரிலோ இல்லை ஒரே வீட்டுக்குள்ளேயே நடக்கும் கதைகளாக இருக்கும் .
இப்பொழுது சொல்லுங்கள் ...

தமிழ் சினிமாவில் ஹாலிவுட் தரம் என்று எதை சொல்லுகிறார்கள் ?
நவீன தொழில்நுட்பம் இருந்தால் ஹாலிவுட் தரமா ? மாற்று கிரகவாசிகள் பற்றிய கலையரசி என்கிற science fiction படத்திலும் , face transplant எனப்படும் முகமாற்று அறுவைசிகிச்சையை மையமாக வைத்து எடுத்த ஆசை முகம் என்னும் இன்னுமொரு science fiction படத்திலும் 1960 களிலேயே நடித்துவிட்டார் எம்ஜியார் .அதுவும் ஹாலிவுட் தரம்தான் .
நான்கு துப்பாக்கி கையில் வைத்து கொண்டு இருந்தால் ஹாலிவுட் ஆ ? அந்த விஷயத்தை தான் ஜெய்சங்கர் அந்த காலத்திலேயே செய்து விட்டாரே ?
வெளிநாட்டு லொகேஷன்களில் படம் எடுத்தால் ஹாலிவுட் தரமா ? சிவந்தமண் ,உலகம் சுற்றும் வாலிபன் என்று பெரிய பட்டியலே இருக்கிறது அதையும் நொறுக்கி தள்ள .
இந்த மேக்கப் வகையறா ? அவ்வை சண்முகி தெரியுமா ?
இன்றைய தமிழ் சினிமா இயக்குனர்களை பொறுத்தவரையில் ஹாலிவுட் தரம் என்றால் வெறும் மேல் சொன்ன காரணங்கள் தான் என்று மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறாரகள் .
ஏன் இங்கே ஹாலிவுட் தரத்தில் வரலாற்று படங்கள் இல்லை ?
ஏன் இங்கே ஹாலிவுட் தரத்தில் சாதிய கொடுமை அதை எதிர்த்துபோராடிய அயோத்திதாசர் ,மீனாம்பாள் ,ரெட்டைமலை சீனிவாசன் பற்றி சொல்லும் வரலாற்று படங்கள் இல்லை ?
மொழிப்போர் பற்றியும் ,மொழிப்போர் தியாகிகள் பற்றிய படங்கள் ஏன் இல்லை ?
சுதந்திர போராட்டத்தின் உண்மை வரலாற்றை ப்பற்றிய படங்கள் எங்கே ?
வயது முதிர்ந்த ஹீரோயின்களை இளவயது ஹீரோக்கள் காதலிக்கும் அழகு காதல் படங்கள் இல்லை ?
உலகத்தர ஆவண படங்கள் ஏன் இல்லை ?
ஒரு வீட்டில் இருக்கும் பேய் பற்றி இல்லாமல் ,வேறு பேய் படங்கள் ஏன் இல்லை ?
போர் படங்கள் ஏன் இல்லை ? இந்தியாவில் நடக்காத போர்களா ?
நான் கேட்கிறேன்
எந்த ஹாலிவுட் படத்தில் ஹீரோ பஞ்ச் டயலாக் வரிக்கு வரி பேசினார் ?
எந்த ஹாலிவுட் படத்தில் ஹீரோ ஆறு பாடங்களுக்கு டூயட் பாடினார் ?
எந்த ஹாலிவுட் படத்தில் ஹீரோ சாமி கும்பிட்டார் ,திருவிழாவில் நடனமாடினார் ?
எந்த ஹாலிவுட் படத்தில் ஹீரோவுக்கு இன்ட்ரோ பாட்டு இருக்கிறது ?
உண்மையிலேயே 'ஜூலி கணபதி' ஹாலிவுட் படம் ,ஏனென்றால் அது அங்கிருந்து அப்படியே காபி .
"மே மாதம் " ஹாலிவுட் படம் ,"a roman holiday " படத்தை அப்படியே காப்பி அடித்திருந்ததால் .
'அன்பே வா' ஹாலிவுட் தர படம் ,ஏனென்றால் அது வரையில் Action பார்முலா படங்களில் நடித்து வந்த எம்ஜியார் தன மார்க்கெட்டை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் ,தன இமேஜை உதறி தள்ளி 'come september ' என்கிற ஆங்கில படத்தை தழுவிய முழு நீள காதல் கதையில் நடித்திருந்தார் . படம் சூப்பர் டூப்பர் ஹிட் . தரம் இப்படித்தான் இருக்கவேண்டும் .
ஒரு பண்டத்தின் தரம் என்னவென்பதை அதை சுவைப்பவர் சொல்லவேண்டும் .நான் அந்த உணவில் விலையுர்ந்த பொருளை கலந்திருக்கிறேன் ஆதலால் நீ ரசித்து உண்ணவேண்டுமென்று நீ என்னை சொல்ல முடியாது .
பக்கத்துக்கு வீட்டில் சிக்கன் குழம்பு அருமையாக இருந்தது சரி .அப்படி ஒரு சிக்கன் குழம்பை நீ உன் வீட்டில் வைக்க ஆசை படுகிறாய் சரி ..ஆனால் நீ செய்யும் தவறு ...உன் வீட்டில் வைக்கும் சாம்பாரில் சிக்கன் துண்டுகளை போடுவது . இப்பொழுது அந்த சாம்பாரும் இல்லை ,சிக்கனும் குழம்பும் இல்லை . ஒரு அபாய வஸ்து மட்டுமே .
தமிழ் சினிமா பார்முலாவை தக்க வைத்துக்கொண்டு அதில் ஹாலிவுட் நுட்பங்களை மட்டுமே கலத்தல்...தமிழ் சினிமாவை அப்படி ஒரு ரெண்டும் கேட்டான் வஸ்துவாக தான் மாற்றும் .
ஹாலிவுட் தரமோ ,பிரெஞ்சு தரமோ ,இரானிய தரமோ நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது ஒன்றுதான் .அது அவர்களின் மண்ணின் உணர்வை ,மனிதர்களை ,மனிதர்களின் கதைகளை ,மனிதர்களின் வாழ்வியலை திரையில் எப்படி அப்பழுக்கில்லாமல் காண்பிக்கிறாரகள் என்பதை மட்டும்தான் .
மேலே சொன்ன எல்லாம் இருக்கட்டும் .
ஹாலிவுட் தரம் எல்லாம் இரண்டாம் பட்சம் .இந்திய தரம் என்று ஒன்றை எப்பொழுது நிறுவ போகிறோம் ?
நம் மக்களின் உண்மை கதை ,வாழ்வியல் ,வரலாறு ,உணர்வு இதுதானே இந்திய சினிமா . அந்த தரத்தில் நாம் எப்பொழுது உயர்த்த போகிறோம் ?
இந்த உலகத்தில் ஒரே கதை தான் இருக்கிறது இன்கிற பழமொழி ஒன்று இருக்கிறது .ஆம் கதை ஒன்றாக இருக்கலாம் ஆனால் சினிமாவின் சிறப்பு திரைக்கதை ,அந்த திரைக்கதை என்கிற விஷயம் ஒன்றை வைத்து மாயாஜாலங்களை நிகழ்த்தலாம் . ஹாலிவுட் ஸ்டைல் ,தொழில்நுட்பம் இவைகளை கொண்ட படங்களையும் தாண்டி ஜெயித்தது அழகாக புனையப்பட்ட கதைகளை கொண்ட சினிமா .
ஹாலிவுட் இல் இருந்து கற்கவேண்டியதை விட்டு விட்டு ஹாலிவுட் தரம் என்ற போர்வையில் தேவையற்ற ஆணிகளை பிடுங்கிக்கொண்டிருக்கிறது .தமிழ் சினிமா .
ஷாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக