சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக அணிகள் இணைப்பு, டிடிவி தினகரனின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார். கட்சி இணைய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வைத்துள்ள நிபந்தனைகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது.
அதில் கழக சட்டதிட்ட விதிகளின் படி துணைப்பொதுச்செயலாளர் பொறுப்புகள் செல்லக்கூடியவையல்ல என்றும் தினகரன் அறிவிப்புகள் செல்லாது என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து இன்று தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அனைத்திந்திய அண்ணா திராவிட முற்போக்கு கழகம் என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்கள். அதில் அதிமுக என்ற பெயரை பயண்படுத்தியுள்ளனர். இது தேர்தல் ஆணையத்தை மீறுகிற செயல். தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழக்க நேரிடும்.
கட்சி சட்டவிதிகளின்படி புதிய பொறுப்பாளர்களை நியமிக்க எனக்கு அதிகாரம் உள்ளது.
கட்சி சட்டவிதிகளின்படி உள்ள அதிகாரத்தின் பேரிலேயே புதிய பொறுப்பாளர்களை நியமித்தேன். பழனிசாமி அணி என்று தனியாக ஏதும் இல்லை. அதிமுக அம்மா அணிதான் இருக்கிறது. ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோதும் இது போன்ற நியமனப் பதவிகள் இருந்திருக்கின்றன. அவர்கள் பதவியில் இருக்கிற வரையில் சுருட்டிக் கொண்டு செல்விதல் தீர்க்கமாக இருக்கிறார்கள். மடியில் கணம் இருப்பதால் அவர்கள் பயப்படுகிறார்கள். அது முதல்வராக இருந்தாலும் அவருக்கும் கனம் இருக்கிறது. அதனால் பயப்படுகிறார்.
ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்ற நல்ல உள்ளம் எனக்கும் உள்ளது. மடியில் கனம் இருக்கும் வலியை சரிப்படுத்தும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். யார் நன்றி மறந்தவர்கள் என்பது நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்படும். கட்சிக்கு ஒபிஎஸ் மட்டுமல்லாமல் வேறு கட்சியிலிருந்து யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம். முதல்வராக நியமித்ததற்கு பழனிசாமி செலுத்தும் நன்றிக் கடனை தொண்டர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக