சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில்,
தினகரனுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா
மறைவுக்குப் பின் பிளவுபட்ட அ.தி.மு.க., பழனிசாமி அணியும், பன்னீர் அணியும்
இணைய வேண்டும் என பேச்சு நடத்த, இரு தரப்பிலும் குழு
அமைக்கப்பட்டது. மத்தியஅரசு அழுத்தம் காரணமாக, இரு அணி சார்பிலும் பேச்சு
நடந்தது. அப்போது, 'சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இருந்து முழுமையாக
விலக்குவதாக, பழனிசாமி அணியினர் அறிவிக்க வேண்டும்' என, பன்னீர் அணியினர்
நிபந்தனை விதித்தனர். இதை, பா.ஜ., மேலிடமும் ஏற்றது. அதன்படி, அறிவிப்பை
வெளியிடுமாறு, பழனிசாமி தரப்பிற்கு அழுத்தமும் கொடுத்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலு வலகத்தில், இன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
மறைந்த
முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய சூழலில் உள்ளோம்.
தினகரனை கட்சியில் சேர்த்தது சட்ட விரோதம். இவரது நியமனம் செல்லாது. கூடி
வாழ்ந்தால் கோடி நன்மை என்ற முறையில் கட்சியை பலப்படுத்த வேண்டும். அசாதாரண
சூழ்நிலையால் சசிகலாவால் செயல்பட முடியவில்லை. ஜெயலலிதா இருந்த இடத்தில்,
பொதுச்செயலாளராக வேறு யாரையும் அமர்த்திப் பார்க்க தொண்டர்கள் விரும்ப
மாட்டார்கள்.இந்த சூழலில் நாம் அனைவரும் கட்சியை வழி நடத்தி வருகிறோம்.
இந்நிலையில் நிர்வாகிகளை தினகரன் நியமித்தது, கட்சிக்குள் குழப்பத்தை
ஏற்படுத்துகிறது. எனவே அந்த பொறுப்பை யாரும் ஏற்க வேண்டாம்.
தினகரன்
அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. அவர் அறிவித்துள்ள
பதவிகள் செல்லாது. அதனை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். துணை பொது
செயலராக தினகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம். ஜெயலலிதாவில்
நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சியை வழிநடத்துவர் எனவும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக