வியாழன், 3 ஆகஸ்ட், 2017

முதல்வர் - அமைச்சர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஆணை !

சிறையிலுள்ள சசிகலாவிடம் ஆலோசனை கேட்டது தொடர்பான வழக்கில் பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் 4 பேருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைசெல்லும் முன் முதல்வர் பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்துவிட்டுச் சென்றார். மேலும் சிறையில் இருந்த சசிகலாவிடம் அமைச்சர்கள் சென்று ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே முன்னாள் எம்.எல்.ஏ தாமரைக்கனியின் மகன் ஆணழகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், 'ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிராக, தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவிடம் ஆலோசனை பெற்ற அமைச்சர்களையும், இவர்களை கண்டிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று (ஆகஸ்ட்-3) நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,' சசிகலாவிடம் ஆலோசனை நடத்தியது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்'. மேலும் விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக