புதன், 23 ஆகஸ்ட், 2017

ஸ்பானிஷ் படங்கள் சென்னையில் முகாம்!

ஸ்பானிஷ் படங்கள் சென்னையில் முகாம்!இந்தியத் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாக உலக சினிமாக்களில் பங்குபெற்று தங்களது இருப்பை பதிவுசெய்து வருவதால், தமிழகத்தில் நடைபெற்றுவரும் திரைப்பட விழாக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி, 19ஆம் தேதியுடன் கொரிய திரைப்பட விழா முடிந்திருக்கும் நிலையில், அடுத்து தொடங்கவிருப்பது ஸ்பானிஷ் திரைப்பட விழா.
தமிழகத்தின் INDO CINE APPRECIATION FOUNDATION உடன், ஸ்பெயினின் சினிமா ரிபப்ளிக் அமைப்பு இணைந்து நடத்தும் ஸ்பானிஷ் ஃபிலிம் ஃபெஸ்ட்டிவல் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையிலுள்ள Alliance Francaise of Madras அரங்கத்தில் இந்தத் திரைப்பட விழா நடைபெறுகிறது.

28ஆம் தேதி Southern Cross-Cruz Del Sur (92 நிமிடங்கள்) என்கிற திரைப்படம் மாலை 6.30 மணிக்குத் திரையிடப்படுகிறது.
29ஆம் தேதி The Exile - EL DESTIERRO (87 நிமிடங்கள்) திரைப்படம் மாலை 6.30 மணிக்கும், MENU FOR TWO (88 நிமிடங்கள்) திரைப்படம் 8 மணிக்கும் திரையிடப்படுகின்றன.

30ஆம் தேதி CARMINA O REVIENTA (71 நிமிடங்கள்) திரைப்படம் மாலை 6.30 மணிக்கும், Hassan’s Way- EL RAYO (86 நிமிடங்கள்) திரைப்படம் 7.40 மணிக்கும் திரையிடப்படுகின்றன.
ஸ்பானிஷ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, தனி மனிதர்களின் வாழ்க்கை சமூகத்தில் எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது அல்லது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் தனி மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதாகவே இருக்கின்றது. குறிப்பாக, இந்தத் திரைப்படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றதுடன் பல விருதுகளையும் பெற்றிருக்கின்றன. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக