வியாழன், 17 ஆகஸ்ட், 2017

உ . பி- 77 குழந்தைகள் மரணம் ... மருந்து கம்பனிகளின் பரிசோதனையா? ஆக்சிஜன் இல்லாமையா?

jose.kissinger": கோரக்பூர் கொடுரம் குறித்து ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் பதிவு. என்னால இன்னைக்கு வேற எந்த பதிவ பற்றியும் சிந்திக்க முடியல. ஒன்னு ரெண்டு இல்ல மொத்தம் 77 குழந்தைங்க செத்து போய் இருக்காங்க. முதலில் ஆக்சிஜன் சப்ளை செய்யும் கம்பெனிக்கு ரூ 64 லட்சம் பணம் பட்டுவாடா செய்யவில்லை அதனால் அந்த ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம் சப்ளையை நிறுத்தி விட்டது என்கிறார்கள். ஆனால் இப்பொழுது மூளை பாதிப்பால் 77 குழந்தைகள் இறந்துவிட்டதாக செய்திகள் கசிகிறது. நிற்க. நான் 8 ஆண்டுகள் Industrial and Medical gases தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்தவன், செய்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன்.

1. முதலில் ஆக்சிஜன் சப்ளை என்பது இரண்டு முறைகளில் செய்வோம். ஒன்று 6m3 or 10m3 அளவுள்ள சிலிண்டர்களில். மற்றது பெரிய 1000 gallons அளவுகளுக்கு மேலுள்ள stationary tanker களில்.

2. இதனை பெரிய மருத்துவமனைக்கு நிச்சயமாக டேங்கர்களில் தான் சப்ளை செய்வோம். அந்த கேஸ் liquified நிலையில் இருக்கும். அதை வாயுவாக்க தேவையான evaporator பொருத்தி இருப்பதால் அதை பாதுகாக்க கேஸின் அளவை monitor சேய்யும் கருவியும் அதில் பொருத்தப்பட்டே இருக்கும். ஆக oxygen இருப்பை அது automatic ஆகவே தெரியப்படுத்தும்.


3. என்ன தான் payment delay ஆனாலும் மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களுக்கு சப்ளை நிறுத்தப்படாது. இது ஒவ்வொரு medical and industrial gas நிறுவனங்களின் policy ஆகும்.

4. ஆக்சிஜன் தான் industrial & medical gas வகைகளிலேயே மிகவும் விலை குறைவான ஒன்றாகும். இதற்கு காற்று தான் மூலப் பொருள். 6m3 அளவுள்ள oxygen cylinder அரபு நாடுகளிலேயே இந்திய மதிப்புக்கு 180 ரூபாய் தான். எனில் இந்தியாவில் இதன் மதிப்பும் இதே அளவோ அல்லது சற்று அதிகமாகவோ இருக்கும். அதனால் 64 லட்சங்கள் oxygen supply க்கு பாக்கி என்பது நம்பும்படியாக இல்லை.

5.காலையில் 30 குழந்தைகள் ஆக்சிஜன் சப்ளையால் இறந்து விட்டனர் என்று கூறி விட்டு, மாலை முதல் 63, பின்னர் படிப்படியாக 77 குழந்தைகள் மூளை பாதிப்பால் இறந்துவிட்டனர் என்று சொல்வது something fishy.

6. அதைவிட தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2 கோடி compensation to family of baby victims என்பது நரநரவென உறுத்துகிறது.

7. 64 லட்சம் இல்லாத அரசிடம் 77*2 கோடி 144 கோடிகள் எப்படி உடனடியாக?

8. அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான மூளை பாதிப்பு, அதுவும் அனைவருமே குழந்தைகள், எப்படி இது சாத்தியம்..? It may never happened anywhere in the world!

9. ஏதேனும் பன்னாட்டு மருந்து கம்பெனியின் சோதனை முயற்சியா? அதற்காக அந்த பிஞ்சுகள் பலியாக்கப்பட்டு ஆளுக்கு 2 கோடிகள் தூக்கி பிச்சையாக வீசப்படுகிறதா? 2013 அறிமுகப்படுத்தப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்பு தடுப்பூசி ஏன் நிறுத்தப்பட்டது, அது என்ன ஆனது?

INDIA LAUNCHES FIRST INDIGENOUS VACCINE FOR JAPANESE ENCEPHALITIS

Govt introduces indigenously developed Jenvac vaccine, which will reduce India’s dependence on imports from China to immunize nearly 4 mn children

http://www.livemint.com/Industry/NVyjUE8DUW3phpiHFmIA2H/India-launches-first-indigenous-vaccineforJapanese-encepha.html

10. இந்த சம்பவத்தையும், இதற்கு காரணமான அம்மாநில அரசையும் உச்சநீதி மன்றம் தானாக முன்வந்து சிறப்புப் புலனாய்வு கமிசன் அமைத்து விசாரிக்குமா..?

இன்று உ.பி..! நாளை..?!

நமது கேள்வி:-

அருமையான சிந்திக்கத்தூண்டும் பதிவு. ஒரு மருத்துவ விற்பனை பிரதிநிதிக்கே இவ்வளவு விசயங்கள் தெரியும்போது டாக்டர்கள் அவர்களுக்கு மேலேயுள்ள அதிகாரிகளுக்கு நிச்சயம் நடந்தது என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடியும். உத்திர பிரதேசம் என்றில்லை நம் தமிழகத்தில் உள்ள டாக்டர்களே கூட இதனை தெளிவுபடுத்தலாம். நிச்சயம் இதை படிக்கும் டாக்டர்கள் இதை தயவுசெய்து உறுதிப்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக