ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பொன்.ராதா: ரஜினி+7 கோடி தமிழர்களும் பாஜகவில் இணைய வேண்டும்:

இந்து  பத்திரிக்கை;  ரஜினி உள்பட தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் பாஜகவில் இணைய வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அதில் யாருமே விடுபடக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது. நமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் யாராக இருந்தாலும் சரி, ஒரு குடும்பம் பிளவுபடக் கூடாது. யாருமே அதை விரும்ப மாட்டார்கள். பிளவுபடாமல் இணைந்தே இருப்பது அதிமுக என்கிற குடும்பத்துக்கு நல்லது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருக்கும் பெரிய கட்சியான அதிமுகவை பலர் கஷ்டப்பட்டு நடத்தி வந்துள்ளனர். அதனால் அந்தக் கட்சி பிளவுபடக் கூடாது. ஆனால், அக்கட்சியை விட பாஜக தமிழகத்தில் முதல்நிலை கட்சியாக உருவெடுப்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்.

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்கும். அவர் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. அவர் உள்பட தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் பாஜகவில் இணைய வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அதில் யாருமே விடுபடக் கூடாது. அதற்கான இலக்கை நோக்கித்தான் நாங்கள் பயணிக்கிறோம்'' என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக