வியாழன், 24 ஆகஸ்ட், 2017

விளம்பர படங்களில் நடிக்க நடிக நடிகர் நடுக்கம் !ஜான்சன் பவுடர் விளம்பர அபராதம் 2,600 கோடி ரூபாய்


சென்னை:ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து விளம்பரங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் நடுக்கம் அடைந்துள்ளனர்.ஜான்சன் அண்டு ஜான்சன் சோப் மற்றும் பவுடரை பயன்படுத்திய பெண், புற்றுநோய்க்கு ஆளானது தொடர்பாக நடந்த வழக்கில், அந்நிறுவனத்திற்கு, 2,600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதற்கு, நடிகர், நடிகையர் மத்தியில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பிரச்னைகளில் சிக்காமல் இருக்கவே, ரஜினி, அஜித், ராஜ்கிரண் உள்ளிட்ட சில நடிகர்கள், எத்தனை கோடி கொடுத்தாலும், வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில், இன்னும் உறுதியாக உள்ளனர். இவர்களை தொடர்ந்து, மற்ற நடிகையரும், இனி விளம்பரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என, முடிவு செய்து உள்ளனர் malaimalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக