வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

19 தினகரன் MLA க்கள் பதவி ராஜினாமா ? எடப்பாடி ஆட்சி கவிழும்? தினமலர் ..

தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், தங்களது பதவியை, ஓரிரு நாட்களில், ராஜி னாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி அணியினர், தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், எந்த வகையில் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து, தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதில் முக்கியமாக, தினகரனால் பதவி பெற்ற, 19 எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ராஜினாமா முடிவு எடுக்கும்பட்சத்தில், பழனிசாமி அரசு கவிழும் என, தினகரன் ஆதரவு வட்டாரம் தெரிவித்தது. - நமது நிருபர் - தினமாலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக