செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

10 வயது சிறுவனுக்கும் 18 வயது பெண்ணுக்கும் திருமணம்.. இந்தி சீரியல் Pehredaar Piya Ki. நிறுத்தம்

சோனி எண்டர்டெய்ன்மெண்ட் சேனலில் வெளியான சர்ச்சைக்குரிய இந்தி சீரியல் Pehredaar Piya Ki. இந்த சீரியல் ஒளிபரப்புவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BCCC (The Broadcasting Content Complaints Council) தடைவிதித்துள்ளது.
‘இந்த சீரியலின் இறுதி எபிசோட் கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பானது. திங்கள் கிழமை எபிசோட் யூ டியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது’ என சோனி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் Scroll.in-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த செய்தி, நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் சோனி நிறுவனத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BCCC நோட்டீஸ் கொடுத்த பின் நிகழ்ச்சியை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’ என்று சோனி தரப்பிலிருந்து தெரிவித்ததாக Indian Express செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ளது. 10 வயது சிறுவனுக்கும் 18 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பதை மையமாகக் கொண்ட இந்த தொடரை இரவு 10 மணிக்கு மாற்றச் சொல்லி ஏற்கனவே BCCC அறிவுறுத்தியது. Change.org 1,30,000 பேரிடமிருந்து இந்த தொடரை நிறுத்தச் சொல்லி கையெழுத்து வாங்கி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் அளித்த பின் அமைச்சர் ஸ்மிருதி ராணி Pehredaar Piya Ki-க்கு எதிராக நடவடிக்கை எடுக்க BCCC-க்கு உத்தரவிட்டார்.
மும்பையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்த தொடரின் இணை தயாரிப்பாளரும் இயக்குநருமான ஷாஷி மிட்டல், ‘குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் விதமாக தாங்கள் இந்த தொடரை உருவாக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக