புதன், 26 ஜூலை, 2017

சொந்தக்கட்சிப் பெண்ணின் மார்பை அழுத்தி, காமக்கொடுமை செய்த RSS பாஜக

பிகு:- இப்படங்களை  இங்கு மறு பதிவேற்றுவது சரியா தவறா என்பது சரியா தீர்மானிக்க முடியல! தவறு என்று கருதினால்  மன்னிக்கவும்!  விஷயத்தை வெறுமையாக கூறினால் பலரின் சிந்தையில் இதன் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகம் எழக்கூடும்  என்ற ஒரே காரணத்துக்காகவே  இதை இங்கு பதிவிட்டுள்ளேன்!
Lulu Deva Jamla : "கதறி அழும் சொந்தக்கட்சிப் பெண்ணைக் கூட மார்பை அழுத்தி, காமக்கொடுமை செய்த RSS பாஜக கட்சியினர். தலீத் பெண்களை தொடும் போதே பாஜகவை விரட்டியடிந்திருந்தால் இந்த நிலைமை வந்துருக்குமா? தன்வினை தன்னை சுட்டது என கதறி அழுத பெண். பாஜக என்கிற கொடிய கட்சியை விட்டு விலகி விட்டார்" என்பதாக தகவல்கள் இந்த படங்களோட இணையத்தில் உலாவுகிறது.
இந்த படங்கள் யாரோடது என்னன்னு எல்லாம் எனக்கு தெரியாது! ஆனா அவ ஒரு பொண்ணு! அப்டி தான் என் கண்ணுக்கு தெரியுறா! இந்த இழி செயலை செஞ்சவன் ஒரு ஈனப்பிறவி! வெறி பிடிச்ச மனித மிருகம்! எந்த கட்சி மதம் இதெல்லாம் ஒரு மசிரு இல்ல! இப்டி ஒரு நொடி அந்த பொண்ணை நீங்க தொடுறதால உங்களுக்கு வேணா அது கிளர்ச்சியா இருக்கலாம்! உன் உறுப்பு ஒரு நிமிஷம் மண்டைய தூக்கிப் பார்த்துட்டு படுத்திரும் அம்புட்டு தான்! ஆனா அந்த பொண்ணுக்கு அது எம்புட்டு மெண்டல் டார்ச்சர்னு தெரியுமா டா லூசுக்குண்ணைகளா?

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு, பதினொண்ணாம் வகுப்பு படிக்கிறப்போ மாநில அளவு பேச்சுப்போட்டியில கலந்துக்கிறதுக்காக நாகர்கோயில் டு சென்னை சொகுசு பஸ் பயணம்... வாழ்க்கையில் மறக்க முடியாது அந்த அருவருப்பை! எனக்கு பின்னால ஸீட்ல இருந்த ஒரு அயோக்கிய நாய் இதே வேலையை செஞ்சதும், அவனை செருப்பை கழட்டி நான் அடிச்சதும், பஸ்சை காவல் நிலையத்துக்கு போக வச்சு களேபரம் பண்ணியதும் எல்லாம்!
இதனால தங்கள் சொந்த அலுவல் தாமதப்பட்டுவிட்டதேன்னு சலிச்சுக்கிட்ட சக பயணிகளோட fucking ரியாக்‌ஷன்:- "ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி ஒரு டிராமாவா?" அன்னிக்கு அந்த சமூகத்துக்கு மேல என் மனசுல தோணின ரௌத்திரம், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது! "உன் வீட்டு பொண்ணோட முலையை இப்படி கண்டவன் பிடிச்சு கசக்கினா வெக்காலிகளா சும்மா விடுவீங்களா டா அவனை?" அப்டீன்னு கத்தி கதறணும்னு தோணிச்சு!
ஆனா எல்லாத்தையும் அடக்கிக்க வேண்டிய சூழ்நிலை! முக்கியமா என் வயசு அப்போ வெறும் பதினாறு! காமம்னா என்ன? பாலுணர்வுன்னா என்னன்னு பகுத்தறிய தெரியாத வயசு! அப்பவெல்லாம் இப்படி இணைய வசதியோ தகவல் பரிமாற்ற வசதியோ இல்லாத காலகட்டம்!
அன்னிக்கு சென்னை போய் சேர்ந்ததும் ஹோட்டல் அறையில முதல்ல நான் தேடி ஓடினது பாத்ரூமுக்கு தான்! எவ்வளவு சோப்பு போட்டு அழுத்தி தேய்ச்சு குளிச்சும் அந்த அருவருப்பு மாறல!
கலந்து கொண்ட போட்டியில சரியா பேச முடியாம திக்கி திணறி நான் அனுபவிச்ச மெண்டல் டார்ச்சர் இருக்கே, இங்க விவரிக்க முடியாது அதையெல்லாம்! எப்பவுமே வெற்றிக்கோப்பையோட வீட்டுக்கு துள்ளிக்குதிச்சு வர்ர பொண்ணு இப்படி தோல்வியை தழுவி அழுறாளேன்னு என் பெற்றொர் அடைஞ்ச மன உளைச்சல்!
இப்ப இதை எழுதுறப்ப கூட என் கண்ணு நிரம்புதுன்னா அந்த நிகழ்வு என் மனசில எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்னு சொல்லத் தேவையில்ல!
கேடுகெட்ட புழுக்கள்! த்தூ 💦
பிகு:- இந்த படங்களை நான் இங்க மறு பதிவேற்றுறது சரியா தப்பான்னு என்னால சரியா தீர்மானிக்க முடியல! தப்புன்னா மன்னிப்பு கேட்டுக்கிறேன்! விஷயத்தை சும்மா சொன்னா நிறைய பேரோட மண்டையில உறைக்காதுங்கிற ஒரே ரீசனுக்காக தான் இதை இங்க போட்டிருக்கேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக