சனி, 15 ஜூலை, 2017

NRI க்களின் மூலதனத்தைக் கூட மோடியால் ஈர்க்க முடியவில்லை

மூன்றாண்டுகளில் மோடி முக்கி முனகி போட்டது எல்லாம்
கூமுட்டைகளே...! மோடி கொடுக்கும் உத்தரவாதத்தை நம்பி இந்தியாவில் முதலீடு செய்ய இதுவரை யாருக்கும் தைரியம் வரவில்லை.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் மூலதனத்தைக் கூட மோடியால் ஈர்க்க முடியவில்லை . பண மதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி வரி விதிப்பின் மூலம் மோடி முடங்கியது உள்நாட்டு பொருளாதாரத்தை மட்டுமே..!
ஊழல் கட்சிகளுக்கு சட்ட பாதுகாப்பு கொடுத்து, உழல்வாதிகளை தட்டிக்கொடுத்து ஆட்சி நடத்தும் மோடியால் ஊழலையும் ஒன்றும் செய்ய முடியாது. எத்தனையோ உருப்படாத திட்டங்களை கொடுவந்த மோடியால் லோக்பால் சட்டத்தை கொண்டு வர முடிந்ததா..?
60 ஆண்டுகால காங்கிரசின் அடையாளங்களை அழிக்கத்தான் மோடி நாடு நாடாய் அலைகிறார். காவி நிறத்தை இந்தியாவிற்கு போர்த்தி காந்தியை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.ன் செயல் திட்டம்.
அம்பேத்கார் பெயரில் உள்ள வாக்கு வங்கிக்காக அவரையும் உள்வாங்கத் தயாராகும் காவிகள் அவர் வாழ்ந்த போது அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியவர்கள் என்பதை மக்களிடம் இருந்து மறைக்கப் பார்க்கின்றனர்..!
காவிப் பொறுக்கிகளுக்கு வேண்டுமானால் மோடியின் கிறுக்குத் தனங்கள் ரசிக்கும் படி இருக்கலாம். நாட்டின் நலன் நாடுவோர் மோடியை ரசிப்பதற்கில்லை...!
- தமிழரிமா வனத்தையன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக