சனி, 15 ஜூலை, 2017

லண்டன் .. ரஹ்மான் ..(12 தமிழ் - 16 ஹிந்தி) டிக்கெட் காசை திருப்பி கேட்ட ஹிந்தி ரசிகர்கள் ... தமிழ்பாடல்களும் பாடிவிட்டாராம்!

ட்வீட்டாரில் பொங்கிய எழுந்த திராவிட குரல்கள் ... சில  உதாரணங்கள் :
Abhi Nandan @Abhinandan248 This is how v feel when Hindi is imposed or Hindi songs r in list in Yuva Dasara Mysuru or Hindi is heard in flight announcement 

ಅರುಣ್ ಜಾವಗಲ್Arun J @ajavgal We must demand refund of tax paid to Indian Govt as we dont get service in my Langauge 

#ARRahman we hear modi speaking in Hindi always, what refund Hindians gonna give???

 ARRahman SINGS a lot of Tamil songs and suddenly all HINDI folks erupt, lol guys that's the same feel when u want ur HINDI all over south.

Garga Chatterjee ✔ @GargaC Hindis want concert ticket refund coz #ARRahman sang Tamil songs. NonHindi states be refunded for taxes that subsidize Hindi states frm 1947

இன்று உலகில் வாழும் முக்கிய இசைக் கலைஞர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். நேற்று வெம்ப்லியில் (பிரிட்டன்) நடைபெற்ற அவரது "நேற்று இன்று நாளை" எனும் தலைப்பிலான இசை நிகழ்ச்சியில் பாடல்கள் பலவும் தமிழில் உள்ளன எனக் கூறி வட இந்திய ரசிகர்கள் வெளி நடப்புச் செய்துள்ளதாக வந்துள்ள செய்தி வேதனை அளிக்கிறது.
இந்தித் திரை இசையினையும், புகழ் மிக்க திரை இசை அமைப்பாளர்களையும், திரைப் பாடகர்களையும் எத்தகைய காழ்ப்புணர்வும் இல்லாமல், பாடல்களின் பொருள் புரியாமலும் எத்தனையோ பத்தாண்டுகளாக ரசித்து வந்துள்ளோம். முகேஷ், மன்னாடே, கிஷோர் குமார், எஸ்.டி.பர்மன், ஆர்.டி பர்மன், லக்ஷ்மிகாந்த் ப்யாரேலால். கீதா தத், லதா, சுமன் கல்யாண்பூர், சலீல் சவ்த்ரி.... என எத்தனை இசைக் கலைஞர்களை நாங்கள் கொண்டாடி வந்துள்ளோம்.
ரஹ்மான் இன்று உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் இசை மேதை.
முட்டாள்கள்..
இசைக்கு ஏது மொழி, இனம், மதம்..
இவர்கள் அங்கு நிதி சேர்த்து இங்குள்ள மதவாதக் கொலைஞர்களுக்கு ஆதரவளிக்க மட்டுமே தகுதியான டேஷ் பக்தர்கள்...
~ அ. மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக