திங்கள், 17 ஜூலை, 2017

முகநூலில் (Facebook) பாலியல் வன்முறை ... தூள் பறக்கும் விவாதம் .. (A)

Lulu Deva Jamla: உள்பெட்டியில் பல நலம் விரும்பிகளின் குமுறல்களை பார்த்ததால மட்டுமே இந்த பதிவு...
நீ ஒரு பொண்ணுன்னு வச்சிக்க. ஒருத்தன் லைவ் வீடியோ போட்டு உன் பேரை சொல்லி "அவளை ஓக்கலாம்" அப்டீங்கிறான். பக்கத்துல இருக்கிற இன்னொருத்தன் கிண்டலா "அப்டி அவளை தப்பா பேச கூடாது" அப்டீங்கிறான். உடனே முதலாமவன் திரும்பவும் உன் பேரை சொல்லி, "ஐ லவ் யூ, உம்மா. நீ யார் கூட வேணா படுக்கலாம், தப்பேயில்ல. ஐ சப்போர்ட் யூ" அப்டீங்கிற வார்த்தைகளை சொல்றான். அந்த வீடியோவை உன் புருஷனும் பசங்களும் சேர்ந்தே பார்க்கிறாங்க. புருஷன் ஒரு வலியோட ஆனா அத வெளிய காட்டிக்காம எழுந்து போறான். பசங்க அருவருப்பு மம்மின்னு சொல்றாங்க. என்ன முடிவெடுப்ப நீ?
நீ ஒரு ஆண் அப்டின்னா உன் மகளுக்கு இந்த நிலைன்னு வச்சிக்க. எப்படிப்பட்ட உணர்ச்சி வரும் உனக்கு?
நான் ஒழுக்கமானவளா அப்டீங்கிறத பத்தி எல்லாம் இங்க யோசிக்க வேண்டிய அவசியமே இல்ல. ஏன்னா என்னோட தனிப்பட்ட வாழ்க்கையை, உணர்ச்சிகளைப்பத்தி அடுத்தவங்க, அதாவது அது எந்த கொம்பனா இருந்தாலும் விமர்சனம் பண்ணுறதுக்கான அதிகாரம் இல்லை என்கிறப்போ, அந்த இழி செயலை செய்ய இவுங்களுக்கு ஏன் தோணிச்சு? ஒரு பொம்பளய எப்படி வேணா வார்த்தைகளால வன்புணர்வு செஞ்சிட்டு குற்ற உணர்வே இல்லாம தப்பிச்சிக்கலாம் என்னும் மனப்பாங்கு! அதானே? பொம்பளன்னா உனக்கெல்லாம் அம்புட்டு இளக்காரமா போச்சா டே? பாலியல் ரீதியான ஒரு விமர்சனத்தை ஒரு பொம்பள மேல வைக்கிறதுக்கு முன்ன, ஒரே ஒரு நிமிஷம் அந்த பொம்பளையை உன் வீட்டு பொண்ணா கற்பனை பண்ணி பார்த்தன்னா உன்னால அப்டி பேசியிருக்க முடியுமா?
இங்க பலபேரும் என் மேல (நோட் பண்ணவும்: என் மேல தான், என் பதிவுகள் சொல்லும் கருத்துக்கள் மேல இல்ல) விமர்சனம் எழுதினப்போ எல்லாம் கண்டுக்காம கடந்துட்ட என்னால இதையும் கடந்து போயிர முடியும் தான். (ஆக்சுவலா கடந்துட்டேன்) ஆனா அப்டி போயிட்டா இப்பவும் அந்த நபர்களை நம்பி அவுங்களோட ஒட்டிகிட்டிருக்கிற பெண்களோட நிலை? எல்லாம் தெரிஞ்சே கூட இருக்கிறவுங்களை பத்தி பிரச்சனையே இல்ல. ஆனா தெரியாம இருக்கிறவங்க? இதே நிலைமை தான் நாளை அந்த பொண்ணுங்களுக்கும் அப்டீங்கிறத மட்டுமாவது நான் சொல்லாம கடந்திட்டா நல்லாயிருக்காதில்ல?

அந்த பெண்களை பத்தி கவலை படுறதுக்கு நீ யாரு, saviour of women kind?" அப்டீன்னு யோசிக்காத! ஏன்னா, இங்க நான் முதல் முதலா கெட்ட வார்த்தை அபிஷேகம் வாங்கினது என் சக பெண் ஒருத்தி தனிமனித தாக்குதலுக்கு உள்ளான போது அவளுக்கு முட்டு குடுத்தேன் என்கிறதுக்காக தான். அதையும் அந்த நபர்கள் அந்த வீடியோவில சொல்றாங்க.... "ஐ ஆல்சோ லவ் லுலு, ஷாலினுக்கு முட்டு கொடுக்க தொடங்குறது வரை லுலுவும் நல்லவளா தான் இருந்தா" அப்டீன்னு. அதுல இருந்தே நீங்க புரிஞ்சிக்கலாம், "தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை சப்போர்ட் பண்ணுறவங்க எவ்வளவு நல்லவங்களா இருந்தாலும் அவங்களை பத்தியும் தப்பான ஒரு இமேஜை மக்கள் மத்தியில் உருவாக்கி அவுங்களையும் தாக்கி ஓட விடுவோம்" என்னும் ஆணவ, ஆதிக்க மனநிலை!
நான் ஆண்களை வெறுப்பவள் அல்ல! ஆனா அந்த ஆதிக்க மனநிலை, அடக்குமுறைகளை அடியோடு வெறுப்பவள். என் சக பெண் ஒடுக்கப்பட்டா நான் அங்க நெஞ்ச நிமித்தி நிப்பேன்! என்னை தாண்டி போய் அந்த பொண்ண தொடுடா பார்க்கலாம் என்னும் சவாலோட! இதுக்கு நான் யாரோட சப்போர்ட்டையும் எதிர்பார்க்க மாட்டேன். அந்த பொண்ணுகிட்ட சொல்வேன், என்னைய பார்த்து படி, எப்டி உன் உரிமைகளுக்காய் தனியா நின்னு போராடுறதுன்னு! சொல்லியிருக்கேன்.
பொண்ணு தனியா நின்னு தான் எதிராளிகளை சமாளிக்கணும். எந்த ஹீரோவோட எண்ட்ரியையும் எதிர்பார்க்க கூடாது. அப்டி வந்தா கூட சேர்த்துக்க கூடாது! ஏன்னா நான் தாக்கப் பட்ட போது இப்ப இந்த வீடியோவில பேசின நபர்கள்ள ஒருத்தர் தாக்குதலை தொடுத்தவர், அவருக்கு முத்தம் குடுத்து கொஞ்சி குலவுபவர் எனக்கு முட்டு குடுத்தவர்! அவுங்க நட்பு பாராட்டிக்கிறது அவுங்க தனிப்பட்ட விஷயம். ஆனா என் பெயரை சொல்லி நடக்கும் இந்த நாடகம்? உன் போதைக்கு நான் தான் ஊறுகாயா?
ரொம்ப கேவலமான ஈனப்பிறவிகள். பெரிய்ய டாட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக