திங்கள், 17 ஜூலை, 2017

டி ஐ ஜி ரூபா .. பன்னீர்செல்வம் .. மாபா பாண்டியராஜன் கூட்டு சதி? சசிகலாவை பரப்பன அக்கிரஹாரத்தில் இருந்து துரத்த .. ?

Special Correspondent FB Wing : சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர்
பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவிற்கு சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும் ரூபா சிறைத்துறை டிஐஜிக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது குறித்து மீடியாக்களுக்கும் பேட்டியளித்திருந்தார்.< இதனிடையில் டிஐஜி ரூபா கொடுத்துள்ள அறிக்கைகள் உண்மைக்கு புறம்பாக உள்ளதாகவும் இது போன்ற சம்பவங்கள் நடக்கவே இல்லை என்று சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் தெரிவித்திருந்தார்.
இது குறித்து லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவது குறித்தும் டிஐஜி ரூபாவின் அறிக்கை குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் சீதாராமையா உத்தரவிட்டார். விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள போதும் டிஐஜி ரூபா செய்தியாளர்களை மறுபடி சந்தித்தது குறித்து மாநில அரசு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக