வியாழன், 6 ஜூலை, 2017

நீதித்துறையில் புரையோடி இருக்கும் சாதி மனோபாவம்!

சுகந்தி நாச்சியாள்: பாரத நாட்டின் ஜனாதிபதியாக ஒரு தலித் முன்னிறுத்தப்பட்ட நிலையில் தான் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி, தலித் வகுப்பைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ் கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் தரமுடியாதுன்னு அடம்பிடிக்குது. அப்படி ஜாமீன் தரமுடியாது சொல்ற நீதிபதிகளின் உடம்பின் குறுக்கே நூல் உள்ளது.
ஜாமீன் கொடுக்கக் கூடாத அளவுக்கு நீதிபதி கர்ணன் என்ன செய்தார்? ‘யோவ், நீதிபதிகளா, நீதி கொடுக்க பொட்டிபொட்டியா பணம் வாங்கலாமா’ன்னு ஆதிக்கசாதி நீதிபதிகளைப் பார்த்து கேள்வி கேட்டுட்டார். அதுவும் அவங்க டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்த அறைக்கே சென்று காட்டுக் கூச்சல் எழுப்பியிருக்கார். அதுதான் விஷயம்… ஒரு தலித் எங்கள பார்த்து குறை சொல்லலாமான்னு ஈகோ பிச்சுகிச்சு. அதனால ஜாமீன் கூட கொடுக்காம ஓடி ஓடி, விரட்டி விரட்டி கைது செஞ்சாச்சு… இனி என்ன நடக்கும்? சிறையில் தள்ளுவார்கள்.
இது நீதித்துறையில் புரையோடி இருக்கும் சாதி மனோபாவத்தைக் காட்டுகிறது. ‘நீ என்ன படிச்சு…எத்தன பெரிய ஆளாவும் இரு. ஆனா எங்கள எதிர்த்தா ஆண்டாண்டா நாங்க ஆண்டுகிட்டு வர்ற எங்க பவரைக் காண்பிப்போம்னு துரத்துறாங்க. இதன்மூலம் மற்ற தலித்துகளுக்கு ‘கீப் கொயட்’ன்னு எச்சரிக்கை விடுக்குது…யாரு? உச்சநீதிமன்றம்.

பாரத நாட்டு கடைசி குடிமகனுக்கும் நீதி சொல்ற நீதித்துறையிலேயே இன்னும் நீதிபதிகள் இடஒதுக்கீட்டில் தலித்துகளுக்கு முழுமையா இடம் கொடுக்கல. தலித்துகளின் இடத்தை அபகரித்துதான் இன்னொரு உயர்சாதி நீதிபதி ஆணவமாக அமர்ந்திருக்கிறார்.
அண்மையில் நீதிபதியா இருந்த ஒரு அம்மா, தன் வீட்டுல ஒழுங்கா வேல செய்யலன்னு ஒரு கடைநிலை ஊழியருக்கு மெமோ கொடுத்து, அந்த கடிதம் இணையம் பூரா சுத்துனது நினைவிருக்கலாம். சாதி மனோபாவம் நீதித்துறையையும் விட்டு வைக்கல.
இந்தியா டுடே என்கிற பார்ப்பன பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஊழல் ஊறிய துறை எதுன்னு ஒரு சர்வே நடத்துச்சு. அப்போ அது வெளியிட்ட முடிவில் ஊழலில் ஊறிய துறையில் முதல் இடம் பிடிப்பது நீதித்துறை, இரண்டாவது பத்திரப்பதிவுத் துறைன்னு சொல்லுச்சு. அப்பவெல்லாம் வாயமுட்டிக் கிடந்தாங்க குறுக்கு நூல்கள். இப்போ ஒரு தலித் அதையே சொன்னதும் குதிக்கிறாங்க…
சாதிய மனோபாவத்தில் ஊறிபோனவர்கள் நீதிபதிகளாகவும் பிரதமர்களாகவும் மந்திரிகளாகவும் அதிகாரிகளாகவும் போலீசாகவும் இருக்கும் தேசத்தில் ஒரு தலித் ஜனாதிபதியால் இந்த தேசத்தை சாதியற்றதாக மாற்றிவிட முடியுமா கனவான்களே!
நாச்சியாள் சுகந்தி, எழுத்தாளர்.  “ஒரு காரணமாவது சொல்லுங்கள்” சமீபத்தில் வெளிவந்த இவருடைய கவிதை நூல். thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக