வியாழன், 20 ஜூலை, 2017

கோல்டன் பாபாவின் புனித யாத்திரை ... கிலோ கணக்கில் தங்கம் ரோலக்ஸ் ... பி எம் டபிள்யு , பார்சுனர் ஆடி கார்கள் ..

ரூ.27 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரமும், ஒரு பி.எம்.டபில்யூ கார், இரண்டு ஆடி கார்கள் மற்றும் மூன்று பார்ச்சுனர் கார்களுடன் வாகன அணிவகுப்பில் ஹரித்வாரில் இருந்து டெல்லி வரை சுமார் 200 கிமீ கண்வார் எனும் புனித யாத்திரை மேற்கொள்பவர் இந்த கோல்டன் பாபா. யாத்திரையின் போது தன் உடல் முழுவதும் தங்க நகைகளுடன் குறிப்பாக தங்கத்தாலான ஆடைகள் அணிந்து இவர் காட்சி தருவதால், இவரைக் காண பொதுமக்கள் அனவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இம்முறை புனித யாத்திரிக்காக வந்துள்ள கோல்டன் பாபா 50-க்கும் மேற்பட்ட தங்க நகைகளை அணிந்து வந்துள்ளார். அவற்றில் தங்க நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள் அடக்கம். அதிக எடை காரணமாக கழுத்து வலி, பார்வைக் குறைபாடு ஏற்படுவதால் இம்முறை 2 கிலோ நகைகளை கழற்றி வைத்து வந்துள்ளதாக இவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு கண்வார் யாத்திரைக்கான வெள்ளி விழாவைக் கொண்டாடவுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். 


இவரது இயற்பெயர் சுதிர் மக்கர். டெல்லியில் ஜவுளித்தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர். பின்னாளில் சன்னியாச வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டு சாமியாராக மாறிவிட்டார். தங்கத்தின் மீதான தனது ஆசை சிறுவயதிலேயே ஏற்பட்டது எனவும், 1972-73 ஆண்டுகளில் 10 கிராம் தங்கம் ரூ.200-க்கு விற்கப்பட்டதாகவும், அப்போதே 40 கிராம் தங்கம் வாங்கி அணிந்திருந்ததாகவும் இவர் தெரிவித்துள்ளார்

இந்த யாத்திரையின் போது தங்க நகைகள் மட்டுமல்லாது, ரூ.27 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரமும், ஒரு பி.எம்.டபில்யூ கார், இரண்டு ஆடி கார்கள் மற்றும் மூன்று பார்ச்சுனர் கார்களுடன் வாகன அணிவகுப்பில் இவர் ஈடுபட்டிருக்கிறார். 
இதுகுறித்து இவர், ‘கார்கள் மற்றும் தங்கத்தின் மீதான இந்த ஆசை சாகும் வரை ஓயாது என்றும், குடும்பம் இல்லாத என்னிடம் யார் சிறந்த ஒழுக்கமுள்ள சீடராக இருக்கிறாரோ அவருக்கு என் சொத்தையெல்லாம் எழுதி வைப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அந்த சீடர் சன்யாசியாக இருக்க வேண்டுமாம். ஒரு சன்யாசிக்கு எதுக்கு இவ்வளவு தங்கம்?;">- ச.ப.மதிவாணன் நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக