வியாழன், 20 ஜூலை, 2017

உங்களை இனி இயக்கப் போவது சமூகவலைத்தளங்களே ! மின்னூல் – வீடியோ


நான்காம் தொழிற்புரட்சியைப் பற்றியும், நாளை உலகை ஆளப்போவது மக்களா, முதலாளித்துவத்தின் எந்திரங்களா? என்பதன் அறிவியல் விளக்கத்தையும், அதன் சமூகவியல் நடைமுறையையும் எளிய முறையில் விளக்குகிறது இந்நூல். “செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்”  எனும் இந்த நூல் இத்தகைய துறையில் அநேகமாக தமிழில் வெளிவரும் முதல் நூல் என்று நம்புகிறோம். இதன் சிறப்பு முதல் நூல் என்பதல்ல, நிகழ்கால – எதிர்கால உலகை தீர்மானிப்பதாக இருக்கும் ஒரு நவீன அறிவியல் மற்றும் அரசியல் துறை குறித்து வாசகர்களுக்கு ஆரம்ப அறிமுகத்தை செய்கிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல்

எட்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

மின்னூலை வாங்க PayUmoney பட்டனை அழுத்தவும். இந்தியாவில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
 Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் தொடராக விரைவில் வெளியிடப்படும்.
“நீங்கள் என்ன சோப்பை பயன்படுத்துகிறீர்கள் என்பதை விளம்பரங்கள் தீர்மானிக்கின்றன” – இது நுகர்வுக் கலாச்சாரத்தில் விரும்பியே சிக்கும் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை விளக்கிய நேற்றைய கருத்து. “நீங்கள் என்ன மாதிரியான வாழ்வில் பயணிப்பீர்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு வடிவமைக்கும்.” – இது நான்காம் தொழிற்புரட்சியை முன்வைத்து ஏகாதிபத்திய உலகம் உருவாக்க முயலும் புதிய ஆக்கிரமிப்பு.
நான் விரும்பாமலே என்னை யார் வடிவமைக்க முடியும் என்று மறுக்கிறீர்களா
முடியும். அன்றாட வாழ்வில் நீங்கள் ஈடுபடும் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள், இணையம் உள்ளிட்ட செல்பேசி பயன்பாடுகள், தொலைக்காட்சி – சமூக வலைத்தளங்களில் உங்களது பங்களிப்பு, அலுவலகத்தில் உங்களது வேலைத் திறன் – என அனைத்தும் மின் தரவுகளாக இணைக்கப்பட்டு உங்களைப் பற்றிய பகுப்பாய்வை அதிநுட்ப மென்பொருள் நிரல்கள் அதி வேகத்தில் செய்கின்றன. வாழ்நாள் முழுதும் நீங்கள் சம்பாதிக்கப் போகும் பணம், அதற்காக செலவழிக்கப்படும் நேரம், வருமானத்தை செலவழிக்கப் போகும் விதம் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன.
மீப்பெரும் மின்தரவுப் பகுப்பாய்வு தொழில்நுட்பம், ரோபொட்டிக்ஸ் எனப்படும் தானியங்கிப் பொறி, வேலைகள் தானியங்கிமயமாக்கம், நானோ எனப்படும் மீநுண் தொழில்நுட்பம், குவையக் கணியத் தொழில்நுட்பம், முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் துறை……… இவை அனைத்தும் மிச்சமிருக்கும் உலகை நேர்த்தியாக கபளீகரம் செய்ய ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் முதலாளித்துவ உலகத்துக்கும் உதவப் போகின்றன.
இந்த நூல் நான்காம் தொழிற்புரட்சியின் அறிவியலை எளிமையான முறையில் அறிமுகம் செய்கிறது. இது சமூகத்தில் உருவாக்கப் போகும் மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டுகிறது. இணையம் – சமூக வலைத்தளங்கள் போன்றவை உங்களை எப்படி வழிநடத்துகின்றன என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.
இறுதியில் ஒட்டு மொத்த மனித குலமும் முதலாளித்துவத்தின் அதி நவீன எந்திர உலகில் சிக்குண்டுவிடும் சாத்தியம் உள்ளதா என்ற அச்சத்தையும் பரிசீலிக்கிறது.
நான்காம் தொழிற்புரட்சி என்றழைக்கப்படும் புதிய அடிமை யுகம் பற்றிய எளிய அறிமுகம் அல்லது எச்சரிக்கையே இந்நூல்.
சுதந்திரத்தை நேசிப்பவர்களுக்கும், நம்மை ஆள நினைக்கும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடுவோர்க்கும் இந்நூல் ஒரு ஆரம்ப நிலைக் கையேடு.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக