செவ்வாய், 18 ஜூலை, 2017

மாயாவதி : தலித் பிரச்சனைகளை பேச அனுமதிக்காவிட்டல் எம் பி பதவி ராஜினாமா?

minnambalam.com  தலித்துகள் மீதான பிரச்னைகளை பற்றி பேச அனுமதிக்காவிட்டால் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி எச்சரித்திருக்கிறார்.
இன்று ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவை கூடியதும் , உத்திரப்பிரதேசத்திலும் மற்றும் நாடு முழுவதிலும் நடக்கும் தலித்துகளின் மீதான தாக்குதல்களைப் பற்றி பேச எழுந்தார் மாயாவதி. இதுகுறித்து அவருக்கு பேச அனுமதி அளிப்படாத நிலையில் பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு கூச்சல்கள் எழுந்தன.
இந்நிலையில், ’’எனக்கு இப்போது பேச வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால், தலித்துகள் மீதான தாக்குதல் பற்றி இந்த அவை கவனம் செலுத்தாவிட்டால் நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது நான் செல்கிறேன். மீண்டும் என் பதவி விலகல் கடிதத்தோடு வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார் மாயாவதி.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் மாயாவதிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இதுபற்றி பேசிய சீதாராம் யெச்சூரி, ‘’ மாயாவதியின் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. தலித்துகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்த அரசு எதுவும் செய்யவில்லை. சிறுபான்மையினரும் தலித்துகளும் இந்த ஆட்சியில் மிக அபாயத்தில் இருக்கிறார்கள்’’ என்றார்.
மாயாவதியின் வெளிநடப்பு பற்றி குறிப்பிட்ட மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ‘’மாயாவதி அவைத் தலைவருக்கு சவால் விடுத்ததன் மூலம் அவையை அம்மதித்துவிட்ட்டார். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக