சனி, 8 ஜூலை, 2017

ஆரியன் உறவாடி கெடுப்பவன் தான். ..

திராவிடர்கள் ஆரியனை கோமாளியாக பார்த்துதான் சேர்த்தார்கள். அவன் நடவடிக்கை எல்லாம் வித்தியாசமாகவும் கேலிக்குரியதாகவும்தான் இருந்தன. அவன் எத்தனை விஷம் கொண்டவன் என்பதை திராவிடர்கள் அறிந்திருக்கவில்லை. தான் நகைக்கப்பட்டாலும் அவன் பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை. நாடோடியாக அலைந்தவனுக்கு நாடடைவது மட்டும்தான் நோக்கம். இன்றை போலவே அன்றும் சரி இனி எப்போதும் சரி ஆரியன் உறவாடி கெடுப்பவன் தான்.
எஸ்.வி.சேகர் புண்ணியத்தில் இந்துத்துவாவை கிழித்து தொங்கவிட்டு விட்டோம். ரசனைக்காக குறும்பதிவுகளாகவும் நகைச்சுவையை சுமக்கும் ஒற்றை வரிகளாகவும் பதிவேற்றியதால், உண்மை சுருங்கி தெரிவதாக ஓர் உணர்வு. அதற்காக கொஞ்சம் விலாவரியான பதிவு. இந்துத்துவம் என நாம் குறிப்பிடுவதெல்லாம் ஆரியத்துவத்தையே. ஆரியனை மட்டும்தான் குறி வைக்கிறோம். இந்துகளை அல்ல என விளங்கி கொள்ளுதல் வேண்டும். ஏன் என கேட்கலாம். மதமும், கடவுளும் பெருந்தொகை மக்களுக்கு நம்பிக்கை சார்ந்த விஷயமாக மாறி விட்டிருக்கிறது. கொந்தளிப்பான மனநிலைகளை கையாள முடியாதவர்களுக்கு கடவுள்தான் சமூக மருத்துவம். அது தரும் தீர்வு சரியா என்றால் இல்லைதான். ஆனால் கடவுளை இல்லாமலாக்கும் மனநிலையை உறுதிப்படுத்தும் இடத்தில் சமூகச்சூழல் இல்லை. ஆனாலும் அதையும் அடைய வேண்டும். பல ஊர்களில் அடிபட்டு விரட்டப்பட்டு ஆரியன் கடைசியாக சிந்து நதியை வந்து அடைகிறான். அங்கு ஒரு பிரம்மாண்ட நகர நாகரிகம் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது. கிராமங்கள் மீள்கின்றன.

‍‍‍‍‍‍
ஆரியன் தன் கால்நடைகளை கிராம நிலங்களில் மேய்ச்சலுக்கு விட பேசி, நல்லவன் போல் உள்ளே நுழைகிறான். நம்பிக்கைகள் உருவாக்குகிறான். தன்னுடைய ஆயுதமான புரோகித வழிபாட்டை செய்து மாய்மால மந்திரம் போல் மக்களை நம்ப வைக்கிறான். ஊருக்குள் இருக்கும் தலைமைகளை ஈர்க்கிறான். ஊரின் கடவுள்களை தங்களின் கடவுள்களாக ஆக்கி ஊர் மக்களை கவர்கிறான்.
‍‍‍‍‍‍
திராவிடர்கள் ஆரியனை கோமாளியாக பார்த்துதான் சேர்த்தார்கள். அவன் நடவடிக்கை எல்லாம் வித்தியாசமாகவும் கேலிக்குரியதாகவும்தான் இருந்தன. அவன் எத்தனை விஷம் கொண்டவன் என்பதை திராவிடர்கள் அறிந்திருக்கவில்லை. தான் நகைக்கப்பட்டாலும் அவன் பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை. நாடோடியாக அலைந்தவனுக்கு நாடடைவது மட்டும்தான் நோக்கம். இன்றை போலவே அன்றும் சரி இனி எப்போதும் சரி ஆரியன் உறவாடி கெடுப்பவன் தான்.
‍‍‍‍‍‍
ஊர் மக்கள், தலைமைகள், குழுத்தலைவர்கள், அரசன், மன்னன், வேந்தன் என எல்லா அதிகாரங்களின் நெருக்கத்துக்கும் ஆரியன் பரவினான். நகர நாகரிகத்தில் இருந்த வர்க்க பிரிவினையை, தன் புரோகிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பிறப்புக்காரணம் கற்பித்து, படிநிலைகளை உருவாக்கி, வேந்தனுக்கு அடுத்த இடத்தில் தன்னை இருத்தி கொண்டான். இந்த ஒரு வரியை போல் அவ்வளவு எளிதாக இவை யாவும் நடக்கவில்லை. பல நூறு வருடங்கள் உழைக்க வேண்டியிருந்தது.
‍‍‍‍‍‍
கண்ணன் கிருஷ்ணன் ஆக்கப்பட்டான். முருகன் தெய்வானயுடன் சேர்க்கப்பட்டான். விநாயகன் சிவனுக்கு மகன் ஆனான். பெளத்தம் ஒடுக்கப்பட்டது. சமணம் அழிக்கப்பட்டது. இல்லாத மதத்துக்கு பெயராக சிந்து நதியின் பெயர் சூட்டப்பட்டது. வேள்விகள் உருவாக்கப்பட்டது. வேந்தனின் சுரண்டலை ஆதரிக்கும் கரும-பிறவி கதை போல் பல கதைகள் உருவாக்கப்பட்டன. எழுச்சி ஏதும் ஏற்பட்டு விடாதிருக்க ஒருவனை ஒருவன் மிதித்து நிற்கும் சமூக அடுக்குகள் ஆழமாக்கப்பட்டது. பெளத்தமும் சமணமும் இந்து மதமே என மாற்றப்பட்டது.
‍‍‍‍‍‍
எதிர்த்த அனைத்தையும் உள்வாங்கி அழித்து ஆரியத்துவம் வளர்ந்தபடியே வந்திருக்கிறது. குறிஞ்சி கடவுள் முருகனை ஏய்த்து ஞானப்பழம் அடைந்த விநாயகனின் கதை கூட ஆரிய அரசியலின் உருவகமாகத்தான் தெரிகிறது எனக்கு.
‍‍‍‍‍‍
ஆகவே, இந்த நாட்டில் இருக்கும் சுரண்டலுக்கும் சாதிக்கும் ஒரே எதிரி ஆரியன்தான். ஆரியத்துவம்தான், குலமுத்திரைகளை கொண்டு வர்க்கத்தை மாற்றி சாதியாக இருத்தியது அவன் தான். நகரம் அழிந்து கிராமங்களுக்கு மக்கள் மீண்ட மிக முக்கியமான காலகட்டம்தான் இந்தியாவின் தலைவிதி. அதை எழுத சரியாக அந்த நேரத்துக்கு ஆரியன் வந்து சேர்ந்தான். ஆரியன் சென்ற மற்ற இடங்களில் எல்லாம் சாதி இல்லையே என்ற கேள்விக்கு இதுதான் சரியான பதில்.
‍‍‍‍‍‍
மற்ற சமூகங்களில் உபரியையும் மூலதனத்தையும் போராட்டங்கள் வழியில் உருவான தொழிலாளர் வர்க்க அரசு முதலாளிகளிடம் இருந்து எடுத்து பொதுவாக்கி கொள்ள முடியும். ஆனால் இந்திய சமூகத்தில் மட்டும்தான் அதற்கான முயற்சி ஏற்படுவதற்கு முன்னமே அது முடிந்து போய்விடுகிறது. காரணம், உபரி ஒவ்வொரு சாதிய படிநிலையிலும் தேங்கி நிற்கிறது. வர்க்க பிரிவினை என்பது சாதிக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை ஒளித்து வைத்தவன் ஆரியன். ஒளித்து வைக்க அவன் பேசியதுதான் ஆரியத்துவம். இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்ட இன்றைய சர்வதேச கார்ப்பரெட் மூலதனம் நிலப்பிரபுத்துவத்துடன் கை கோர்த்து கொண்டுவிட்டது.
‍‍‍‍‍‍
இதை போலவே தலித்தியம், பெண்ணியம், ஆணியம், தமிழ் தேசியம், சூழலியம், முற்போக்கு என ஒன்றாய் இயங்க வேண்டியவை எல்லாம் தனித்தனி துண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளன.
‍‍‍‍‍‍
அதையும் செய்தவன் யார் என்பது உங்களுக்கு தெரியும்தானே?
-கிழி கிழி கிழி பை Rajasangeethan John

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக