வெள்ளி, 7 ஜூலை, 2017

பாஜக திமுகவை குறி வைத்து இரகசிய நகர்வு?

ஆபரேஷன் ஸ்டாலின் - டெல்லியின் ரகசிய மூவ்!
பாஜக-வின் பலமே தனக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் சேரவிடாமல் தடுத்துப் பிரித்துவைப்பதுதான். இதை உடைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஒன்றுசேர வேண்டும் என்று சமீபத்தில் லாலு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் லாலு சொன்ன பாஜக-வைப் பற்றிய முதல் இலக்கணம் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் என்று டெல்லி வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் நமக்குக் கிடைக்க அதுபற்றி விசாரித்தோம்.
“கடந்த ஜூன் 3ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளும் அவரது சட்டப்பேரவை வைர விழாவும் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் தேசிய அளவிலான தலைவர்களை திமுக அழைத்து நடத்தியது. இந்த விழா மூலமாக எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவு இந்திய அளவில் சாத்தியம் என்ற கருத்துரு உருவானது.

மேலும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தேசிய அரசியலில் கடமையாற்ற வேண்டிய தேவையும், கட்டாயமும் இருக்கிறது என்று அவ்விழாவில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த விழாவை தமிழக பாஜக உற்று கவனித்ததோ, இல்லையோ... டெல்லி பாஜக உற்று கவனித்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
அதாவது தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவு தொடர்ந்துவிடக் கூடாது என்றும் இதற்காக திமுக - காங்கிரஸ் உறவைக் குறிப்பாக ஸ்டாலின் - ராகுல் காந்தி இடையே நிலவி வரும் நல்லிணக்கத்தை உடைக்க வேண்டும் என்பதே பாஜக-வின் திட்டமாக இருக்கிறது.
அதன்படியே காய்களை நகர்த்தத் தொடங்கியது பாஜக. குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக-வின் வாக்குகள் காங்கிரஸ் அணிக்குத்தான் கிடைக்கும் என்று தெரிந்தும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசி ஆதரவு கேட்டார்.
இதன்மூலம் பாஜக ஸ்டாலினை எதிரியாகப் பார்க்கவில்லை என்ற அரசியல்ரீதியான விதை தூவப்பட்டது, திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது ஓர் இயற்கையான மதச் சார்பற்ற கூட்டணியாக கருதப்படுகிறது. இதை உடைத்துவிட்டால் தேசிய அளவில் பிற ஒருங்கிணைவுகளை உடைப்பது எளிது என்று கருதுகிறது பாஜக.
இதை அரசியல்ரீதியாகப் புன்னகை முகத்துடன் ஒருபக்கம் செய்கிறார்கள் என்றால்… இன்னொரு பக்கம், அதிகாரத்தை பயன்படுத்தி சில முயற்சிகளும் நடக்கின்றன. அதாவது, ஸ்டாலினின் குடும்பத்தினர் சிலரின் வெளிநாட்டு வணிகத் தொடர்புகள், அதுதொடர்பான அவர்களது பரிவர்த்தனைகள் ஆகியவற்றை தீவிரமாக ஆராய்ந்து வரும் பாஜக, அதில் ஒரு துருப்புச்சீட்டை எடுத்து அதன்வழியாக திமுக-வைத் திசை திருப்ப வைக்க சில ஏற்பாடுகளும் நடக்கின்றன.
இந்த டெல்லி ஆபரேஷனின் நோக்கமே… காங்கிரஸ் திமுக கூட்டணி உடைக்கப்பட வேண்டும் என்பதுதான். 2ஜி தீர்ப்புக்குப் பின் இந்த ஆபரேஷன் வேகமாக செயல்படத் தொடங்கும்” என்றும் தெரிவிக்கிறார்கள் அவர்கள்.
‘ஆபரேஷன் ஸ்டாலின்’ எந்தவிதத்தில் பாஜக-வுக்குப் பயன் தரும் என்பது அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும். மினன்ப்மல்ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக