திங்கள், 10 ஜூலை, 2017

கம்யுனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீசிய வி எச் பி பயங்கரவாதி .. சரவணகுமார் யோகா மாஸ்டர், லண்டனில் படித்த எஞ்சினியர்

Specialcorrespo/ வி.ஹெச்.பி-யின் கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளரான
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர், யோகா பயிற்சியாளராகவும் உள்ளார். மேலும், இவர் லண்டனில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 17 ஆம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் அதிகாலையில், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் அங்கிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
இது தொடர்பாக சிசிடிவி காட்சியையும் காவல் துறையினர் வெளியிட்டனர். அதில், சந்தேகிக்கப்படும் நபர்கள், கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் தற்போது வி.ஹெச்.பி Vishwa Hindhu Parishad முக்கிய புள்ளியை கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக