ஞாயிறு, 16 ஜூலை, 2017

பிக் பாஸ் கமலஹாசன் கருத்துக்களை அடித்து துவம்சம் செய்த மதிமாறன் ... சபாஷ் தோழரே?

‘நடிகர் கமல்ஹாசனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்’ என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், ‘பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களை ஆபாசமாக சித்திரிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை காயத்ரி ரகுராம், ‘சேரி பிஹேவியர்’ என்ற சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசியதால் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிமீதும் காயத்ரி ரகுராம்மீதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜூலை 16ஆம் தேதி விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “கமலின் முழு முயற்சியாலேயே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. பணத்துக்காக அவர் எதையும் செய்வார். சமூகத்தில் மிகவும் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து ஆபாச கருத்துகள் வெளியிடுகின்றனர். கமல்மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக