வெள்ளி, 21 ஜூலை, 2017

ஹிந்து தேசிய கொள்கையே போருக்கு இந்தியாவை தூண்டுகிறது' சீன பத்திரிகை!

முதலில் சீனர்களுக்கு மதமென்பது சங்பரிவார் போல தீவிரமாக  இல்லை ... இரண்டாவது .. ஆனானப்படட அமெரிக்காவையே ... வளைய வைப்பவர்கள் சீனர்கள் .... போயிங் ஆர்டர் ரத்து என்று அறிவித்தால் போதும் ... அமெரிக்கா வழிவார்கள் ...மேற்கு நாடுகள் செய்த அநியாயங்களை சீனா மறக்கவில்லை ... காகிதம் ..வெடி மருந்து ..வான வெடி ..அச்சு ..எல்லாம் சீனர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்தவை ..2030 இல் சீனா உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவை மிஞ்சிவிடும் .. இந்தியாவில் இன்றும் 90 % மக்களுக்கு கழிவறை இல்லை...

தினமலர் :புதுடில்லி: 'ஹிந்து தேசிய கொள்கையே, சீனாவுக்கு எதிராக போர் புரிவதற்கு, இந்திய அரசை துாண்டி விடுகிறது' என, சீன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 இந்தியாவின் சிக்கிம் எல்லை - சீனா - பூட்டான் இடையேயுள்ள டோகோலாம் பகுதியில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட, சீனா முயன்றது; இது, நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், நம் படைகள், அதை தடுத்து நிறுத்தின. அதையடுத்து, எல்லையில், ஒரு மாதத்துக்கு மேலாக,பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னை குறித்து, சீன அரசு நடத்தும் மற்றும் அதன் ஆதரவு பத்திரிகைகள், தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்து வருகின்றன.

சீனாவுடன் போருக்கு இந்தியா தயாராகி வருவதாக, சீன பத்திரிகைகளில் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. , 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில், நேற்று வெளி யிடப்பட்டுள்ள கட்டுரையில், ஹிந்து தேசியவாதம் என மத்திய அரசை விமர்சித்து, கட்டுரை வெளி யிடப்பட்டுள்ளது. கட்டுரையில் கூறியுள்ளதாவது:


இந்தியாவில்,ஹிந்து தேசியவாதம் என்ற கொள்கை மேலோங்கி வருகிறது. இந்த ஹிந்து தேசியவாதம் தான், சீனாவுக்கு எதிராக போர் புரிவதற்கு, இந்தியாவை துாண்டி விடுகிறது. இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை, இந்தியாவின் மத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று, சீனாவுக்கு எதிராக திணிக்கப்பட்டு உள்ள நடவடிக்கை. பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பின், இந்தியாவில், தேசியவாதம் என்ற சிந்தாந்தம்  அதிகரித்துள்ளது.
ஆனால், அந்த அரசு, மத தேசியவாதம் தீவிரமடைந்துள்ளபோது, எதையும் செய்யவில்லை.சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக, மிகவும் கடினமான வெளியுறவு கொள்கையை பின்பற்றும்படி, இந்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசியவாதம் என்ற கொள்கையை முன்னிறுத்தி, சீனாவுடனான நல்ல உறவை பேணி காக்கும் விவேகத்தை இந்தியா இழந்து விட்டது.இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக