ஞாயிறு, 16 ஜூலை, 2017

பன்னீர்செல்வம் : எடப்பாடியும் ஸ்டாலினும் புதுவகையான கூட்டணி அமைத்துள்ளனர்

சென்னை: கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும் ஊழல் செய்த எடப்பாடி பழனிச்சாமியுடன் திமுக கூட்டணி வைக்காது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை முகப்பேரில் திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆண்டுகால சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: மக்களை பற்றி அதிமுக அரசு கவலைப்படவில்லை. அரசை எதிர்த்து மக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட ஒரு சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சட்டசபையில் மக்கள் பிரச்னைகள் குறித்து திமுக பேசி வருகிறது. தமிழக மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்யும் கட்சிகளுடனே திமுக கூட்டணி வைக்கும். வளர்ச்சியை எந்த அளவுக்கு தடுக்க முயற்சிக்கிறார்களோ, அந்த அளவுக்கு பீனிக்ஸ் பறவை போல் திமுக வெளியே வரும். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும் ஊழல் கட்சிகளோடு திமுக கூட்டணி வைக்காது.

மக்கள் நலனுக்காக குரல் கொடுப்பவர்களுடனும், மக்களுடனும் தான் திமுக கூட்டணி வைக்கும் என்றார். முன்னதாக திருவாரூரில் நடந்த விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், யாரும் பார்த்திராத அதிசயம் சட்டசபையில் நடக்கிறது. ஆளுங்கட்சியை எதிர்ப்பதில் எதிர்க்கட்சி ஏனோதானோ என்ற நிலையில் செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மக்கள் மன்றத்தில் புலி போல பேசுகிறார்.
ஆனால் சட்டப் பேரவையில் எலிபோல் பதுங்குகிறார்.
இந்த வகையில் சட்டப் பேரவையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு புதுவகையான கூட்டணி அமைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டாலின் இவ்வாறு கூறினா tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக