சனி, 29 ஜூலை, 2017

மத போதகர் ஜாகிர் நாயக் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

புதுடில்லி: மதபோதகர் ஜாகிர் நாயக்கை தலைமறைவு குற்றவாளியாக என்.ஐ.ஏ .அறிவித்துளளது. வங்கதேச தலைநகர் தாகாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 22 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் தொடர்புள்ள இரு பயங்கரவாதிகள், மும்பையை சேர்ந்த பிரபல மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ஜாகிர் நாயக் நடத்தி வரும் சர்ச்சைக்குரிய, 'பீஸ் டிவி' சேனலுக்கு, வங்கதேச அரசு தடை விதித்தது. இவர் மீது இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. துபாய் சென்றிருந்த ஜாகிர் நாயக் இன்னும் இந்தியா திரும்பவில்லை.ஜாகிர் நாயக், மலேசியா ,சவுதி அரேபியா நாடுகளின் குடியுரிமை பெற்றதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் நேற்று மும்பை சிறப்பு கோர்ட் உத்தரவுப்படி , ஜாகிர்நாயக் தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. அவரது சொத்துகள் முடக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக