வியாழன், 6 ஜூலை, 2017

சாதி ஒழிந்தால் இந்தியா வல்லரசாகும்... சாதி தொடர்ந்தால் இருக்கிற தகுதியும்......

Shalin Maria Lawrence :(Hidden Figures தொடர்ச்சி)  அமெரிக்காவின் கறுப்பின பாகுபாடு
கொடுமைகள் பற்றி உலகம் அறியாதது அல்ல . ஆனால் ...தன் நாடு ,முன்னேற்றம் என்று வந்த பொழுது காலம் காலமாக தாங்கள் தொடர்ந்து வரும் பழக்கங்களையும் ,சமூதாய கட்டமைப்புகளையும் ,இன வெறுப்புகளையும் ஒரே நாளில் ,ஒரே நொடியில் நொறுக்கி தள்ளுகிறார்கள் அமெரிக்கர்கள் . அவர்களை பொறுத்தவரை நாடு முன்னேற வேண்டும் அதற்க்கு தடையாக இருக்கும் எதுவாக இருப்பினும் ,அது இனவெறி என்றால் கூட அதை தூக்கி போட்டு செல்ல வேண்டும் என்பது .
இதற்கு பெயர்தான் நாட்டு பற்று / Nationalism /Patriotism .
ஆனால் இந்தியாவிலோ இயற்கையில் இல்லாத ஜாதி என்கிற ஒரு செயற்கை விஷயத்தை வைத்து கொண்டு ,மதம் என்கிற விஷ செடியை வளர்க்க அப்பாவிகளின் ரத்தத்தை ஊற்றி அதற்க்கு நாட்டுப்பற்று என்று பெயர் வைத்து கொண்டிருக்கிறாரகள் . நாடு எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை நாங்கள் மற்ற சமூகத்தை வளர விட மாட்டோம் அவர்கள் வாழ்வுநிலையை மாற்ற மாட்டோம் என்கிற வெறி இன்று அதிகம் இந்தியர்களிடையே காண படுகிறது . இது எப்படி நாடு பற்றாகும் ? தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை கடந்து நாட்டை தொழில் ,விவசாயம் ,அறிவியல் என்று முன்னிலையில் எடுத்து செல்லும் மனம் இந்தியர்களுக்கு இல்லை .

தேசிய கோடி என்கிற ஒரு மூன்று மீட்டர் துணிக்கு இருக்கும் மரியாதை இந்தியாவில் 5 அடி மனிதனுக்கு இல்லை .தேசிய கீதத்திற்கு மயங்கிய தேச பக்தர்களின் காதுக்கு பல லட்சம் மக்களின் கூக்குரல் கேட்பதில்லை . இந்தியாவில் நாட்டுப்பற்று எல்லாம் ஒரு போலி வேஷம் மட்டுமே .
2 .இங்கே ...இரண்டாவது மிக மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றையும் கவனிக்க வேண்டும் .
ரோஹித் வெமுலாக்களும் ,முத்து கிருஷ்ணன்களும் ஏன் தற்கொலைக்கு தூண்டப்பட்டார்கள் தெரியுமா ?
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தற்போதைய வலிமையான கோஷங்கள் எதற்கு தெரியுமா ?
IIT உள்ளிட்ட அரசின் உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு மாணவர்கள் அசிங்க படுத்தப்படுவது எதற்கு தெரியுமா ?
IIT IIM போன்ற அரசு உயரளவி நிறுவனங்களில் முக்கிய பதவிகளிலும் ,பேராசிரியர்களாவாகவும் தலித்துகளுக்கு சொற்ப எண்ணிக்கைகளில் இருப்பது ஏன் என்று தெரியுமா ?
இந்த நாட்டின் முன்னேற்றத்தில் இவர்களின் பங்கு என்று ஒன்று இருக்க கூடாதென்கின்ற எண்ணம்தான் அது .
கறுப்பர்கள் துணையோடு நாசாவில் வெற்றி கண்ட அமெரிக்கா அதை வெளியில் சொல்லி கொள்ள வெட்கப்படவில்லை . ஆனால் உயர்சாதி இந்தியர்களுக்கு அது ஆகும் காரியம் இல்லை . நாடு நாசமாய் போனாலும் பரவாயில்லை ஆனால் ஒரு தலித் அறிவாளி என்று அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது .
அதுமட்டுமில்லாது நாட்டை முன்னேற்றும் பெரும் பணிகளில் ஒடுக்கப்பட்டவர்கள் அதிக அளவில் பங்கேற்கும்போழுது அதுவரை இருந்த சமூக கட்டுப்பாடுகளை ,சாதி கட்டமைப்புகளையும் களைய வேண்டி வரும் .ஒடுக்கப்பட்டவர்களின் திறமையை பற்றிய பொதுபுத்தியை பொய்யாய் ஆக வேண்டி வரும் .அவர்கள் கால் படாமல் பார்த்துக்கொண்டு இடங்களில் அவர்களுக்கு இரத்தின கம்பளம் வரவேற்பு கொடுக்க வேண்டி வரும் .
இந்த சுயநலத்திற்காகத்தான் ரோஹித் வெமுலாக்கள் கொல்லப்பட்டார்கள் .
இந்த சுயநலத்தினால்தான் ஆதி திராவிட பள்ளிகள் கொளுத்தப்பட்டன .
இந்த hidden figures திரைப்படம் ஒன்றை நன்றாக உணர்த்துகிறது .
நாடு முன்னேற வேண்டுமாயின் அந்த நாட்டின் மக்களிடையே சமத்துவம் கட்டாயமாகிறது .மனிதர்களிடையே காட்டப்படும் அன்பிற்கும் நாட்டின் மீதுள்ள அன்பிற்கும் வேறுபாடு இல்லை .
ஒரு நாடு வல்லரசாக கனவு காண தேவையில்லை .மாறாக என்னை சுற்றியுள்ள மனிதர்களை சமமாக நினைத்து சமமாக நடத்தினால் போதும் நாடு தானே வல்லரசாகும் .
ஷாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக