வெள்ளி, 14 ஜூலை, 2017

அர்ஜுன் சம்பத் : .பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை ஆடைகளோடு ஆபாசமே உலவுகிறார்கள் .

Shalin Maria Lawrence நேற்று அர்ஜுன் சம்பத் அவர்கள் உதிர்த்த முத்துக்கள்
1 .சமீப காலமாக விஜய் டிவி விவாத நிகழ்ச்சிகள் இந்திய கலாச்சாரத்தை பண்பை எதிர்க்கும் விதமாக இருக்கின்றன .உதாரணத்திற்கு தாலி வேண்டுமா வேண்டாமா ? தனிக்குடித்தனம் வேண்டுமா வேண்டாமா,பெண்ணியம் போன்ற பகுத்தறிவு ,முற்போக்கு விஷயங்களை அதிகம் பேசி வருகின்றனர் அதனால் பிக் பாஸ் மற்றும் விஜய் டிவி விவாத நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் .
2 . ஜூலி என்கிற பெண்ணை ,எதற்காக செலக்ட் செய்தார்கள் ? வேறு யாரும் கிடைக்கவில்லையா ?
3 . பிக் பாஸ் ஒரு தேச விரோத நிகழ்ச்சி .
4 .ஜூலி ஒரு தேச விரோதி .மோடியை திட்டி இருக்கிறார் .தனி தமிழ்நாடு வேண்டும் என்று தீட்டி இருக்கிறார் .ஆகவே அவர் தேச விரோதி .
5 .தனி தமிழ்நாடு என்று சொன்னால் தேச விரோதம் .
7 .தனி தமிழ்நாடு என்று அண்ணா சொல்லலாம் ,ஜூலி சொல்ல கூடாது .
8 .ஜூலி நிகழ்ச்சியின் துவக்கத்தில் சிகப்பு ஆடை அணிந்திருந்தார் அது கம்யூனிச அடையாளம் .அவர் ஒரு கம்யூனிஸ்ட் .
8 .ஓவியா குட்டை பாவாடை போடுகிறார் அது ஆபாசம் ,கலாச்சார சீர்கேடு .
10 .ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரேய வீட்டில் வாழ்கிறார்கள் அது அசிங்கம் ,அவமானம் .காலாச்சார அழிவு .
10 .ஆங்கிலேயர்கள் வந்துதான் மக்களை மலம் அல்ல வைத்தார்கள் .அவர்களே ஜாதி பிரிவினைகளை உண்டாக்கினார்கள் .
11 .ரஜினி ஆன்மீகவாதி அதனால்தான் அவரை ஆதரிக்கிறோர் .கமல் ஹிந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் நாத்திகர் அதனால் அவரை எதிர்க்கிறோம் .
12 .சினிமா தமிழர் பண்பாட்டை கெடுக்கிறது .ஆனால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் .

13 . கேரளாவில் இந்து இயக்கங்களை அழித்து கொண்டிருக்கும் பினராயி விஜயனுக்கு கமல் வாழ்த்து சொல்லுகிறார் .அது குற்றம் .கமல் ஹிந்துக்களுக்கு எதிரி .பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமல் தேச விரோத சக்திகளை புகுத்துகிறார் .
14 .பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை ஆடைகளோடு ஆபாசமே உலவுகிறார்கள் .
15 .ஆடைகுறைப்பு தமிழ் பண்பாடு இல்லை .
16 .பகுத்தறிவு தமிழர் பண்பாட்டை சீரழிக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக